'என்ன, டபுள் ஆக்சன் போடுறீங்களா'... 'இம்ரான் கானை அலறவிட்ட இந்திய அதிகாரி'... 'யாரு சாமி இவங்க, Google Search-ல் தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்'... தீயாய் பரவும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனது கேள்விகளால் பாகிஸ்தானை அலறவிட்டுள்ளார் இந்திய அதிகாரி ஒருவர்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் ''தங்கள் நாடு இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியை விரும்புவதாகத் தெரிவித்தார். அதேநேரத்தில் தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றால் நிச்சயம் காஷ்மீர் விவகாரத்திற்குத் தீர்வு காண வேண்டும்'' என அதிரடியாகக் கூறினார்.

இதற்கு ஐநாவுக்கான இந்தியப் பிரதிநிதியும் செயலாளருமான ஸ்னேகா துபே (Sneha Dubey) கொடுத்த பதிலடி தான் தற்போது இணையத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. அதில், ''“ஒரு கட்டிடத்திற்கு தீ வைத்து விட்டு, அத்தீயை அணைக்க முற்படுவது போலப் பாகிஸ்தானின் செயல் உள்ளது” எனக் காட்டமாகக் கூறினார். மேலும் “பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வளர்த்து விட்டு வருகிறது. இது உலகத்திற்கு பெரும் ஆபத்தாக உள்ளது. இதனால் உலக அரங்கில் பொய்யைப் பரப்பும் பாகிஸ்தானை அம்பலப்படுத்தும் கடமை எங்களுக்கு இருக்கிறது.

காஷ்மீரும் லடாக்கும் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள்தான். அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. உலகையே அதிரவைத்த அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் தந்தது பாகிஸ்தான் தான்.

அதை எந்த நாடும் அவ்வளவு எளிதில் மறந்து விடாது. பின்லேடன் போன்றொரு நபரை, பாகிஸ்தான் தியாகி போல் இப்போது வரை சித்தரிக்கிறது. பாகிஸ்தான் அமைதியை மீட்பதற்கு நினைத்தால், அதற்கு முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

அதற்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டியது பாகிஸ்தானின் கடமைதான்” என்று தனது பதிலடி மூலம் பதில் கொடுத்துள்ளார் ஸ்னேகா துபே. இளம் இந்திய வெளியுறவுத் துறை (IFS) அதிகாரியான ஸ்னேகா துபேவின் பேச்சு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்