'ஒரு லிட்டர் 'நாக பாம்பு விஷம்' ஒரு கோடி ரூபாய்'... 'சேம்பிளுக்கு இருந்த மாத்திரைகள்'... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு லிட்டர் நாகப்பாம்பு விஷம் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாவட்ட வன அதிகாரி அசோக் மிஸ்ராவிற்கு ரகசியத் தகவல் ஒன்று வந்தது. அதில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கொடிய நாகப் பாம்பு விஷம் கடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனச்சரக அதிகாரிகள் கொண்ட குழு, பாம்பு விஷம் வாங்குபவர்களைப் போல நடித்து, ஒரு பெண் உட்பட 6 பேர் கொண்ட குழுவைச் சுற்றி வழைத்து கைது செய்தனர்.

இந்த பாம்பு விஷத்தை 10 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக அவர்கள் விலை பேசியுள்ளனர். இதற்காக 5மிமீ அளவு கொண்ட மாதிரிகளை அவர்கள் சேம்பிளுக்காக வைத்திருந்ததாக மாவட்ட வன அதிகாரி அசோக் கூறினார். இருப்பினும் வனத்துறையினரிடம் சிக்கியவர்களிடம் விசாரித்த போது, அந்த குடுவைகளில் என்ன இருந்தது என்று தங்களுக்குத் தெரியாது என்றும் இந்த குடுவையில் மருந்து இருப்பதாகத் தெரிவித்த கவுதம் என்ற நபர் இதனை ஒருவரிடம் கொடுக்க வேண்டும் என்று கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஒரு லிட்டர் விஷத்தில் மதிப்பு சர்வதேசச் சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகம் என்றும், ஒரு லிட்டர் விஷத்தைச் சேகரிப்பதென்றால் 200 நாகங்களிலிருந்து விஷம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் வன அதிகாரி அசோக் மிஸ்ரா கூறினார்.

வனவிலங்கு பாதுகாப்பு தடை சட்டத்தின் 9, 39, 44, 49 மற்றும் 51 என 5 பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்து மேற்கண்ட 6 பேரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் அனைவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்