"ஆத்தி, இது எப்படி இங்க.." நாற்காலி ஓட்டைக்குள் கேட்ட சத்தம்.. "லைட் அடிச்சு பாத்ததுல.." நடுங்கி போன நெட்டிசன்கள்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிளாஸ்டிக் சேர் ஒன்றிற்குள் இருந்து சத்தம் கேட்ட நிலையில், அதற்குள் லைட் அடித்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி, பலரையும் மிரண்டு போகச் செய்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சிக்ஸ், பவுண்டரி'ன்னு விளாசிய அயர்லாந்து வீரர்.. ஹர்திக் பாண்டியா கொடுத்த 'செம' பரிசு.. "கூடவே ஒண்ணு சொன்னாரு பாருங்க.."

இணையத்தில் அடிக்கடி நேரத்தை செலவிடும் நாம், அதில் நம்மைச் சுற்றி நடக்கும் பல செய்திகளையும், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் நாம் அதிகம் பார்த்திருப்போம்.

இதில் வேடிக்கையான நிகழ்வுகளும், அதிர்ச்சியான நிகழ்வுகளும், சில நேரம் சற்று பயமுறுத்தக் கூடிய நிகழ்வுகளும் இடம் பெற்றிருக்கக் கூடும்.

நாற்காலி ஓட்டைக்குள் கேட்ட சத்தம்

அப்படி ஒரு வீடியோ தான், தற்போது வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அனைத்து வீடுகளிலும் விதவிதமான பிளாஸ்டிக் நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும், நாளாக நாளாக பழங்காலத்து மாடல் நாற்காலிகளை தற்போது வரும் பிளாஸ்டிக் சேர் டிசைன்களில் பயன்படுத்தியும் உருவாக்கி வருகிறார்கள். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் உள்ள பழங்கால மாடல் நாற்காலியில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், பின்பக்கம் இருக்கும் கால்களுக்கான துளைகள் சேரில் உட்காரும் இடத்துடன் இணைந்த படி, அதற்குள்ளேயே இருக்கும்.

லாவகமாக இருந்த பாம்பு

அப்படி இருந்த அந்த துளைக்குள் இருந்து தான் சத்தம் முதலில் கேட்க தொடங்கி உள்ளது. தொடர்ந்து, அந்த நாற்காலிக்குள் இருந்த ஓட்டையில், சத்தம் வந்த இடத்தில், என்ன இருக்கிறது என்பதை அறிய லைட் அடித்து பார்த்துள்ளனர். அப்போது, அந்த ஓட்டைக்குள் பாம்பு ஒன்று இருந்ததைக் கண்டு, பார்த்தவர்கள் பதறிப் போயுள்ளனர். நாம் உட்கார பயன்படுத்தும் நாற்காலியின் ஓட்டையில் பாம்பு இருந்ததால், பலரையும் இந்த வீடியோ பீதியடைய செய்துள்ளது.

மேலும் இந்த வீடியோவைக் காணும் பலரும் இது போன்று நாற்காலியை பயன்படுத்தும் அனைவரும் சற்று கவனமாக பார்த்து எடுத்துக் கொண்டு உட்கார வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். அதே போல, மேலும் சிலர், நாற்காலி ஓட்டைக்குள் பாம்பு எப்படி இவ்வளவு லாவகமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது என்பதை பற்றியும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Also Read | "ப்பா.. என்ன இது இப்டி இருக்கு?!.." வாயை பிளந்த மீனவர்கள்.. "100 வருஷத்துக்கு மேல வாழ்ந்துட்டு இருக்காம்.."

SNAKE, CHAIR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்