‘ஏது பாம்பா?’.. ஒப்புகைச் சீட்டு எந்திரத்துக்குள் இருந்த பாம்பு.. அலறி ஓடிய வாக்காளர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவாக்குச் சாவடியில் கொடுக்கப்பட்டும் ஒப்புகைச் சீட்டு எந்திரத்துக்குள் பாம்பு இருந்ததால் வாக்காளிக்க வந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தொகுதி தேர்தல் தொடங்கிய நிலையில், கேரளாவின் 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் சார்பில் பி.கே. ஸ்ரீமதி, காங்கிரஸ் கூட்டணி சார்பில் கே. சுரேந்திரன், பாஜக சார்பில் கே. பத்மநாபன் ஆகியோர் போட்டியிடும் கேரளாவின் கண்ணூர் நாடாளுமன்றத் தொகுதியில் விறுவிறுவென வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது.
காலை 7 மணி முதலே இந்தத் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது. இதே தொகுதியில்தான் முதல்வர் பினராயி விஜயன் கண்ணூர் மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தார். இந்த தொகுதிக்குட்பட்டதுதான் மயில் கண்டகை நகர். இங்குள்ள வாக்குப்பதிவு மையத்தின் ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் ஏதோ சத்தமும், எந்திரம் ஆடுவது போன்ற தொனியும் ஏற்பட வாக்களித்துக்கொண்டிருந்த வாக்காளர்கள் அதிர்ந்தனர்.
அப்போது திடீரென பாம்பின் சத்தம் என கண்டுபிடித்ததும் மக்களும் சில அதிகாரிகளும் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். பின்னர் அதிகாரிகளும் போலீஸாரும் வந்து பாம்பைப் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டுவிட்டு மீண்டும் வாக்குப்பதிவினை தொடர்ந்தனர். எனினும் பலர் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு நேரம் எடுத்துக்கொண்டனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'களத்துல இறங்குறதுனா இதுதான்'...'சலுயூட்' போட வைத்த 'இளம் கலெக்டர்'...வைரலாகும் வீடியோ!
- உயிருக்கு போராடிய தேர்தல் அதிகாரி.. '45 நிமிஷம் போனில் கேட்டு முதலுதவி செய்த CRPF வீரர்'!
- ‘அவங்க பானைய உடைச்சுதிலுருந்துதான் பிரச்சனை ஆச்சு’.. கொதிக்கும் விசிக தொண்டர்கள்!
- 'அது எப்படி 'ரஜினி'க்கு மட்டும் அப்படி நடந்துச்சு'?...அறிக்கை கேட்கும் 'தலைமை தேர்தல் அதிகாரி'!
- ‘ஏம்ப்பா இப்படியாப்பா பண்ணுவீங்க’.. திருமண போட்டோ ஷூட்டில் நடந்த ‘வைரல்’ மொமண்ட்.. வீடியோ!
- 'ஓ'ண்ணு ஒரே 'அழுகை'யில்...'வேற லெவலில் ட்ரெண்டான சிறுவன்'...அழுகைக்கு கிடைத்த 'சர்ப்ரைஸ்'!
- 'மோடி திரும்பவும் பிரதமராவாரா??’.. ரஜினி கூறிய பதில்!
- 'தவறுதலாக பாஜக பட்டனை அழுத்தி ஓட்டு’.. ரோஷத்தில் தனக்குத்தானே தண்டனை கொடுத்த வாக்காளர்!
- '2-ம் நம்பர பிரஸ் பண்ண சொன்னாங்க’.. பாஜகவுக்கு ஓட்டு போட சொன்னார்களா தேர்தல் பணி அதிகாரிகள்?
- மேற்கு வங்கத்தில் வன்முறை.. வாக்குப்பதிவின்போது கலவரம்.. தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு!