நாகப்பாம்பு கடித்ததால் கோமா நிலை.. வா வா சுரேஷ் எப்படி இருக்கிறார்? மருத்துவர்கள் தரும் விளக்கம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளா: நாகப்பாம்பு கடித்து சுயநினைவை இழந்த வா வா சுரேஷ் உடல்நிலை குறித்து முக்கிய தகவல்களை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertising
>
Advertising

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் இதுவர சுமார் 50,000க்கும் மேற்பட்ட பாம்புகளை லாவகமாக பிடித்துள்ளார். சிறிய பாம்புகள் மட்டுமில்லாது கரு நாகப்பாம்பு உள்ளிட்ட அரிய வகை பாம்புகளை பிடிப்பது மட்டுமில்லாது பாம்பு பிடிப்பது தொடர்பான வீடியோ காட்சிகளையும் வெளியிட்டு வருவார். பாம்புகள்மீது அதீத பாசம்கொண்டவர். வழக்கமாக வீடுகளுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் வனத்துறைக்கோ, தீயணைப்புத்துறைக்கோ போன் செய்வார்கள். ஆனால், கேரளத்தில் பாம்பைக் கண்டால் உடனே வா வா சுரேஷை அழைப்பார்கள்.

வா வா சுரேஷ் பாம்பு பிடிக்கும் ஸ்டைலைப் பார்க்க ஊரே ஒன்று கூடும்.  எவ்வளவு பெரிய வீரியம்கொண்ட பாம்பாக இருந்தாலும் வாவ சுரேஷின் கைகளில் அடங்கி, அவர் சொல்படி கேட்கும்.  அவர் பிடித்ததில் 200-க்கும் மேற்பட்ட ராஜநாக பாம்புகளும் அடங்கும். பாம்புகளைப் பிடிக்க எந்தவிதக் கருவியும் இல்லாமல் வெறும் கைகளால் பிடித்துவிடுவார்.அந்த அளவுக்கு பாம்புகளைக் கையாளுவதில் வல்லவர் வாவ சுரேஷ். வா வாசுரேஷ் பாம்பு பிடிக்கும் ஸ்டைலைப் பார்க்க ஊரே ஒன்று கூடும்.

இந்நிலையில்,  கோட்டயம் மாவட்டத்தில் சங்கனாச்சேரி அருகே உள்ள குறிச்சி பகுதியில் நாகப் பாம்பு ஒன்று ஊருக்குள் சுற்றித்திரிவதாக வா வா சுரேஷுக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்றவர் பாம்பைத் தேடினார். பாம்பு ஒரு கருங்கல் காம்பவுண்ட் சுவர் இடுக்கில் புகுந்தது. காம்பவுண்டை உடைத்தபோது சுமார் 7 அடி நீளமுள்ள நாகப் பாம்பு வெளியே வந்தது. பாம்பின் வாலைப் பிடித்த வா வா சுரேஷ், அதை ஒரு டப்பாவில் அடைக்க முயன்றார்.  திடீரென வா வா சுரேஷின் வலது கால் தொடையில் பாம்பு கடித்தது. சுரேஷ் கடிபட்ட இடத்தை நன்றாக அழுத்தி ரத்தத்தை வெளியேற்றினார். அப்போது பாம்பு மீண்டும் கல் சுவருக்குள் செல்ல முயன்றது. அந்தப் பாம்பை மீண்டும் பிடித்து ஒரு டப்பாவுக்குள் அடைத்த நிலையில் மயக்கமடைந்தார்.

உடனடியாக அங்கிருந்த மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். முதற்கட்டமாக அவருக்கு விஷமுறிவு மருந்து கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சுய நினைவை இழந்து சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரை பாம்பு கடிக்கும் வீடியோவும் சமூகவலைத்தளத்தில் வெளியான நிலையில் பலர் அவர் குணமடைய வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தனர். பாம்பு கடிக்கு சுரேஷ் ஆளாவது இது முதன்முறையல்ல. ஏற்கெனவே நூற்றுக்கும் அதிகமான முறை தம்மை பாம்புகள் தீண்டியிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். பல முறை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு சென்று நலமுடன் திரும்பியிருப்பதாகவும் சுரேஷ் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், கோமா நிலைக்கு சென்ற வா வா சுரேஷ் பேச தொடங்கியதாகவும், சிகிச்சைக்கு ஒத்துழைத்து வரும் வா வா சுேஷ் மருத்துவர்கள், செவிலியர்களிடம் பேசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வா வா சுரேஷின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 நாட்களுக்கு தொடர்ந்து ஐசியூவில் சிகிச்சை தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

KERALA, VA VA SURESH, SNAKE CATCHER, COMA STAGE, KOTTAYAM MEDICAL COLLEGE, HOSPITAL, DOCTORS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்