மனைவி சம்மதம் இல்லாமல் கணவர் கட்டாய தாம்பத்திய உறவு கொள்வது கிரிமினல் குற்றமா..? சூடான விவாதம்.. அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமனைவியிடம் வலுக்கட்டாயமாக தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதை தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாக என மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஸ்மிரிதி ராணி பதிலளித்துள்ளார்.
நீதிமன்றத்தில் நிலைவையில் உள்ள வழக்கு
கணவர் மனைவியிடம் வலுக்கட்டாயமாக தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதை தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆர்.ஐ.டி. பவுண்டேஷன், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் ரிட் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை நீதிபதிகள் ராஜீவ் ஷக்தர் மற்றும் டி.ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
கட்டாய தாம்பத்திய உறவு
இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று இதுகுறித்து விவாதம் எழுந்தது. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி பினாய் விஸ்வம், ‘கணவர் மனைவியின் சம்மதம் இல்லாமல் கட்டாய உறவு வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றமா?’ என கேள்வி எழுப்பினார்.
ஸ்மிருதி இரானி பதில்
இதற்கு பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி, ‘இந்த நாட்டில் நடக்கிற ஒவ்வொரு திருமணத்தையும், வன்முறை திருமணம் என்று கண்டிக்க வேண்டியதில்லை. அதேபோல இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆணையும் பாலியல் துன்புறுத்தல் செய்பவர்கள் என்று கருதுவதும் நல்லதல்ல. தற்போது இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் இதுகுறித்து விரிவாக விவாதிப்பதற்கு மாநிலங்களவை விதி எண்.47 அனுமதிக்காது.
உதவி மையங்கள்
மாநில அரசுகளுடன் இணைந்து பெண்களை பாதுகாக்கும் முயற்சியில் மத்திய அரசு எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது. நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இலவச உதவி எண்கள் செயல்பட்டு வருகின்றன. அவை 66 லட்சத்துக்கும் அதிகமான பெண்களுக்கு உதவி உள்ளன. அதேபோல் 703 ‘ஒன் ஸ்டாப்’ மையங்களும் மூலம் 5 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உதவி பெற்றுள்ளனர். நமது நாட்டில் பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பது அனைவரின் கடமை’ என அமைச்சர் ஸ்மிரிதி ராணி கூறினார்.
பாஜக எம்.பி கேள்வி
இதனை அடுத்து பாஜக எம்.பி. சுஷில் மோடி, ‘வலுக்கட்டாயமாக கணவன், மனைவியுடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்வதை தண்டிக்கத்தக்க கிரிமினல் குற்றமாக அரசு அறிவிக்க ஆதரவாக உள்ளதா? இதன்மூலம் திருமணம் என்ற நிகழ்வே முடிவுக்கு வந்துவிடும்’ என மற்றொரு கேள்வியை எழுப்பினார்.
ஆண்களுக்கு எதிராக பயன்படுத்தும் அபாயம்
இதற்கு பதிலளித்த ஸ்மிரிதி ராணி, ‘இதுதொடர்பான வழக்கு நீதித்துறையின் பரிசீலனையில் உள்ளதால் பதில் அளிக்க முடியாது. 2017-ல் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், திருமண பாலியல் வன்கொடுமை குறித்த எந்த ஒரு சட்டமும் வரையறுக்கபடவில்லை. மேற்கத்திய நாடுகளில் இது குற்றமென குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக இந்தியாவும் இதை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. இந்த சட்டத்தை ஆண்களுக்கு எதிராக உபயோகபடுத்தும் அபாயமுள்ளது’ என கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டான்ஸ் ஆடுனது பிரச்சனை இல்ல.. IT மாப்பிள்ளையை மாத்துனத்துக்கு காரணம் இதுதான்.. மணப்பெண் பரபரப்பு குற்றச்சாட்டு..!
- இந்தியாவின் முதல் மெட்டாவெர்ஸ் திருமணம்! எவ்வளவு செலவாகும்? அசத்திய தமிழக ஜோடி
- கல்யாணம் பண்ண ஒரு பொண்ணு கூட கிடைக்கல.. சாமியாராகி ஊருக்கு வந்து சொன்ன அருள்வாக்கு.. அப்படியே பலிச்சிடுச்சு!
- கல்யாணத்துக்கு வந்து அலைய வேணாம்.. ஸ்ட்ரைட்டா கூகுள் மீட் வாங்க.. அசத்தும் ஜோடி! ஆனா சாப்பாடு எப்படி? அதான் ஹைலைட்டே!
- செல்போனுக்கு 'தாலி' கட்டி நடந்த திருமணம்! என்கேஜ்மென்ட் முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆச்சு.. பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு!
- ஆஹா, சூனாபானா ஊரே ஒண்ணு கூடிருச்சு.. இனிமே அலார்ட்டா இருந்துக்க டா.. ஊருக்கு மத்தியில் 90's கிட்ஸ் வைத்த பேனர்
- பிரேக் அப் மூலம் உருவான யூடியூப் சேனல்.. இப்போ காதலியே கொடுத்த 'கிரீன்' சிக்னல்.. மதன் கௌரியின் 'சுவாரஸ்ய' காதல்
- எதுக்குப்பா கல்யாணத்து அன்னைக்கே டைவர்ஸ் கேக்குற? மாப்பிள்ளை சொன்னத கேட்டு ஆடிப்போன கோர்ட்டு!
- நாங்க எதுக்கு வெட்கப்படணும்? லெஸ்பியனாக இருப்பதில் பெருமை.. இந்திய முறைப்படி நடந்த 'ஓர்பால் ஈர்ப்பு' நிச்சயதார்த்தம்
- முதலிரவுக்காக காத்திருந்த புது மாப்பிள்ளை.. 'அந்த நேரத்தில்' மணப்பெண் சொன்ன அதிர்ச்சி தகவல்!