சுட்டுக்கொன்றவர்களுக்கு தண்டனை.. உதவியாளரை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி ஆவேசம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅமேதி தொகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட தனது உதவியாளர் சுரேந்திர சிங்கின் மரணச் செய்தியைக் கேட்டு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அமேதி திரும்பினார்.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் இந்த மக்களவைத் தேர்தலிக் போட்டியிட்டனர். கடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவிய ஸ்மிருதி இரானி இந்தத் தேர்தலில் ராகுல் காந்தியை 55 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், ஸ்மிருதி இரானியின் பிரச்சார களத்தில் முக்கிய ஆளாக இருந்த, ஸ்மிருதியின் உதவியாளரும் பாஜகவைச் சேர்ந்தவருமான சுரேந்திர சிங், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு அங்கு விரைந்த ஸ்மிருதி இரானி அவருடைய இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு, அவரது பிரேதத்தை தோளில் சுமந்து சென்ற சம்பவம் அவரது குடும்பத்தை உருகவைத்துள்ளது.
இதுபற்றி பேசிய சுரேந்திர சிங்கின் மகன், ஸ்மிருதி இரானியின் வெற்றியை அடுத்து தன் தந்தை யாத்திரை நடத்தியது பிடிக்காமல் அந்நிய சக்திகள் அவரை சுட்டுக்கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவருடைய பழைய எதிரிகள் அவரை சுட்டுக்கொன்றதாக முதற்கட்ட விசாரணையின் முடிவில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சுரேந்திர சிங்கை சுட்டுக்கொன்றவர்களை கண்டுபிடித்து மரண தண்டனை பெற்றுத்தர அழுத்தம் தரப்போவதாகவும், அவ்வாறு செய்யப்போவதாக சுரேந்திர சிங்கின் குடும்பத்தாருக்கு, தான் வாக்கு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்த சின்ன வயசுல' எம்.பி ஆகி அரசியல் பொறுப்புடன் மக்களவைக்கு செல்லும் முதல் பெண்!
- ‘வெள்ளையா இருக்கவரு பொய் சொல்ல மாட்டாருன்னு’ நம்பி ஓட்டு போட்ருக்காங்க.. தேர்தல் முடிவு குறித்து சீமான் ஆவேசம்..
- நாங்கள் ஏற்கனவே அறிவித்தை போல.. பரபரப்பான வெற்றிக்கு பின் தொல்.திருமாவளவன்!
- ‘எனக்கு அவருதான் முக்கியம்’!..‘தாத்தாவுக்காக நான் ஜெயிச்ச எம்.பி பதவிய ராஜினாமா செய்றேன்’!
- '13 வருஷம் வனவாசம் போனவங்கலாம் இருக்காங்க.. எங்களுக்கு 14 மாசம்தானே?'!
- 'மாம்பழத்துக்கு மவுசு குறைகிறதா?'... '7 இடங்களிலும் தோல்வி'!
- 'தனியொருவன்'.. அதிமுகவின் அந்த 'ஒரு தொகுதியில்' வெற்றி பெற்ற வேட்பாளர்.. எவ்வளவு வாக்குகள்?
- ‘பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க எந்தெந்த மாநிலங்கள் பக்கபலமாக இருந்துள்ளது தெரியுமா’?.. முழுவிவரம்!
- திமுக, அதிமுக-வுக்கு அடுத்து இந்தக்கட்சி தானா..? தேர்தலில் அசத்திய புதுக்கட்சிகள்..
- 'ஏன் 'பொண்டாட்டி' கூட எனக்கு ஓட்டு போடலியா?'... 'குமுறி குமுறி' அழுத வேட்பாளர்... வைரல் வீடியோ!