‘சொன்னாங்களே.. செஞ்சாங்களா?’ ஆவேசமாகக் கேட்ட அமைச்சர்.. ‘டக்குன்னு’ பல்பு கொடுத்த மக்கள்! வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாமக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தின் போது பொதுமக்களிடம் மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இராணி பல்பு வாங்கியுள்ளார்.
மக்களவை தேர்தலில் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 12 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் ஆளும் கட்சியான பாஜகவும், காங்கிரசும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பாஜக தனது இந்துத்துவா அஸ்திரத்தின் மூலம் பல தொகுதிகளை அறுவடை செய்ய பெண் சாமியார் சாத்வி பிரக்யாவை போபால் தொகுதியில் பாஜக களம் இறக்கியுள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இராணி பங்கேற்றார். அப்போது, பேசியவர் “சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி கூறினார். உங்களது கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா?” என்று கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்களை நோக்கி கேட்டார்.
இந்நிலையில், அமைச்சர் கேட்ட கேள்விக்கு அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும், “ஆமாம், எங்கள் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்று கோரஸாக கூறினர். இதனால், ஸ்மிருதி ராணி தர்ம சங்கடமான நிலைக்கு உள்ளானார்.
இதனையடுத்து, சில நிமிடங்கள் தடுமாறிய அவர் பின்னர், தனது பேச்சை வேறு விஷயத்துக்கு மாற்றி பிரசாரத்தை தொடங்கினார். இந்நிலையில், இவர் மேடையில் பேசிய வீடியோவை மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “தமிழகத்தில் மறுவாக்குப்பதிவா? ஏப்ரல் 18 ல் நடைபெற்ற தேர்தலில் குளறுபடியா”?... தேர்தல் அதிகாரி கூறும் பதில் என்ன?
- ‘இப்பவே 70 கிட்டத்தட்ட.. 25 வருஷம் கழிச்சா? இதெல்லாம் டூ மச்சா தெரியல?’.. வைரல் ட்வீட்!
- 'நீங்களும் இத பண்ணனும்'.. ஸிவா தோனி முன்வைக்கும் கோரிக்கைய பாருங்க.. வைரல் வீடியோ!
- ‘தந்தை இறந்த நிலையில், இறுதிச்சடங்கை முடித்த கையோடு வந்து வாக்களித்த நபர்’!
- ’திருமண விடுப்பு' தராத மேலதிகாரி.. 13 முறை துப்பாக்கியால் சுட்ட காவலர்.. தேர்தல் பணியின்போது சோகம்!
- ‘அசால்ட்ப்பா இதெல்லாம்’.. மீன் பிடிப்பதுபோல் பாம்பைப் பிடித்து விளையாடும் பிரியங்கா.. வைரல் வீடியோ!
- 'சோக்கிதார்' இல்ல...அவர் ஒரு 'திருடன்'...'கோரஸாக கத்திய சிறுவர்கள்'...வைரலாகும் வீடியோ!
- 'நான் சிவனேன்னு தாண்டா இருந்தேன்'...'தேர்தல் அதிகாரிகள்' அதிரடி...'நாய்க்கு ஏற்பட்ட நிலை'!
- ‘இந்த தேர்தல் ரொம்பவே ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா?’.. சச்சினின் வைரல் ட்வீட்!
- “என்ன? நான் சொல்ற கட்சிக்கு ஓட்டு போடமாட்டியா?”.. மனைவிக்கு கணவரின் கொடூர தண்டனை!