'கையில' கெடைச்சான்.. 'தொவைச்சு' அயன் பண்ணிடுவேன்.. யாருன்னு 'நீங்களே' பாருங்க!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாம் எல்லோருமே ஒருகாலத்தில் ஸ்கூல் வாழ்க்கையை வெறுத்தவர்கள் தான். ஆனால் இப்போது நினைத்து பார்த்தால் அந்த வாழ்க்கையே நன்றாக இருந்தது என தோன்றுகிறது.

அதேபோல சிறுமி ஒருவரும் தன்னுடைய பள்ளி வாழ்க்கையை வெறுத்து, மனம் நொந்து போய் பேசியிருக்கிறார். அவரது ரியாக்ஷன்களும், பேச்சும் பாஷை தெரியாதவர்களுக்கு கூட அவரது மனதை தெள்ளத்தெளிவாக எடுத்து கூறுகிறது.

அதில் அவர், ''எனக்கு ஸ்கூலில் இருந்து விடுதலை வேண்டும். அதுவும் ஒரு மாதம் விடுதலை வேண்டும்.காலை எழுந்து, பிரஷ் பண்ண வேண்டும், தண்ணீர் குடிக்க வேண்டும், வேகமாகப் பள்ளிக்குப் பால் குடித்துவிட்டு ஓட வேண்டும்.அங்கே போய் அமர்ந்தால் பிரேயர், இங்கிலீஷ், கணக்கு, இவிஎஸ் என நீளுகிறது. குஜராத்தியும் இடையில் வருகிறது.

இந்த பள்ளிக்கூடத்தை கண்டுபிடித்தவன் மட்டும் என் கையில் கிடைத்தான் என்றால் அவனை அடித்து துவைத்து அயன் பண்ணி விடுவேன். கடவுள் எல்லாவற்றையும் நன்றாக தான் படைத்து இருக்கிறார். அப்படியே படிப்பதையும் நன்றாக படைத்து இருக்கலாம்,'' என தெரிவித்து இருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்