ஒரே வீடியோ.. டோட்டல் டேமேஜ்.. டேமேஜான ரோட்டைக் கண்டு கொதித்து குழந்தை எடுத்த நிரூபர் அவதாரம்! - வீடியோ

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காஷ்மீர் மாநிலத்தில் தனது வீட்டிற்குச் செல்லும் சாலை மிகவும் மோசமடைந்துள்ளதாக சிறுமி ஒருவர் நிருபராக மாறி வெளியிட்ட வீடியோ இப்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

Advertising
>
Advertising

இணைய பயன்பாடு மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்ததன் காரணமாக உலகின் எந்த ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வையும் சாமானிய மனிதர்களால் வெளியுலகிற்கு உணர்த்த முடிகிறது. துனிசியாவில் துவங்கி மத்திய கிழக்கையே நடுநடுங்க வைத்த மல்லிகைப் புரட்சிக்கு டிவிட்டர் தான் மிக முக்கிய காரணம். தங்களது வலிகளை, கோரிக்கைகளை அரசுக்கும் சக மக்களுக்கும் எடுத்துரைக்க தாங்களாகவே செய்தியாளர்களாக மாறிவருகிறார்கள் பொதுமக்கள்.

காஷ்மீரைச் சேர்ந்த சிறுமி ஒருவரும் இதேபோல, நிருபராக மாறி தனது வீட்டிற்கு அருகே உள்ள சாலை மிகவும் மோசமடைந்திருப்பதாகவும் அக்கம் பக்கத்தினர் இங்கேயே குப்பை கொட்டுவதால் இப்பகுதி சுகாதாரம் இல்லாமல் இருப்பதாகவும் அந்த வீடியோவில் தனது மழலைக் குரலுடன் பதிவு செய்து வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். இதனால் இந்த க்யூட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

அரசு வேலை.. 5 லட்சம் கொடு .. அமைச்சர்களுக்கும் பங்கு தரணும்! வீடியோவில் சிக்கிய திமுக நகர செயலாளர்

எங்க வீட்டுக்கு யாரும் வரமாட்டேங்குறாங்க..

சிறுமி வெளியிட்டுள்ள வீடியோவில்," இந்த சாலையில் உள்ள மேடு பள்ளங்களை பாருங்கள்.. அருகில் வசிப்பவர்கள் குப்பைகளையும் இங்கேயே கொட்டுகின்றனர். சாலை மோசமாக இருப்பதால் விருந்தினர்கள் எங்களது வீட்டிற்கு வர தயங்குகின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வைரல் வீடியோ

சிறுமி பேசியதை அவரது தாய் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார் எனத் தெரிகிறது. ஏனெனில் வீடியோ எடுப்பவரை அச்சிறுமி அம்மா என அழைக்கிறார். மேலும், இந்த வீடியோவை லைக் செய்யுமாறும் ஷேர்  செய்யுமாறும் சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

Couple Sharing குழு வழக்கு.. '14 ஆயிரம்' ரூபா குடுத்து.. இந்த தப்ப வேற பண்ணிருக்காங்க.. தோண்டி பார்த்ததில் கிடைத்த 'ஷாக்' ரிப்போர்ட்

கடந்த 9-ஆம் தேதி ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை சுமார் 1.83 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். 4000-க்கும் மேற்பட்ட லைக்குகள் இதற்கு குவிந்துள்ளது.

GIRL, BAD ROAD, KASHMIR, CITIZEN REPORTER, HOLDING MIKE, காஷ்மீர், சிறுமி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்