"லீவு மட்டும் வேணாம் ப்ளீஸ்.." கலெக்டருக்கு சிறுமி வைத்த கோரிக்கை.. வைரல் பின்னணி..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் கடந்த சில தினங்களாகவே, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

"லீவு மட்டும் வேணாம் ப்ளீஸ்.." கலெக்டருக்கு சிறுமி வைத்த கோரிக்கை.. வைரல் பின்னணி..
Advertising
>
Advertising

Also Read | 14 வருசம் முன்னாடி.. வேலைக்கு Apply பண்ண 'வாலிபர்'.. பதிலே வரல'ன்னு.. அவரு செஞ்சதுதான் 'அல்டிமேட்'

இதன் காரணமாக, கேரள மாநிலத்திலுள்ள பொன்முடி, கல்லார்குட்டி உள்ளிட்ட பல அணைகளும் நிரம்பி வழிந்து வருகின்றன.

கடும் மழை காரணமாக, மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியே வந்து செல்லுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமில்லாமல், கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்று தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. பொதுவாக, ஒரு பள்ளிக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்தாலே, குழந்தைகள் பலரும் குதூகலம் அடைவார்கள். வீட்டிலேயே இருப்பது என்பது சிறப்பாக இருக்கும் என்பதால், குழந்தைகள் விடுமுறையை பெரிதும் விரும்புவார்கள். இதனிடையே, கேரளாவில் மழை காரணமாக தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

அப்படி ஒரு சூழலில், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த சஃபூரா நெளஷத் என்ற ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர், வயநாடு மாவட்ட ஆட்சியர் கீதாவுக்கு மெயில் ஒன்றை தனது சார்பில் அனுப்பி உள்ளார். அதன்படி, நான்கு நாட்கள் தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது என்றும், தயவு செய்து பள்ளியை திறக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த இமெயிலில் ஆறாம் வகுப்பு மாணவியான சஃபூரா நெளஷத் குறிப்பிட்டுள்ளார்.

இதனை வயநாடு கலெக்டர் கீதா, தனது பேஸ்புக் பக்கத்தில், ஆறாம் வகுப்பு மாணவி அனுப்பிய ஸ்க்ரீன் ஷாட்டினை பகிர்ந்திருந்தார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரையும், சிறுமியின் கருத்து வெகுவாக கவர்ந்துள்ளது.

பொதுவாக, குழந்தைகள் என்றாலே பள்ளியில் படிக்கும் போது அதிகம் விடுமுறை எடுத்து வீட்டிலே இருக்கத் தான் நினைப்பார்கள். ஆனால், இந்த சிறுமியும் தயவு செய்து பள்ளியை திறக்க வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை வைத்தது தொடர்பான மெயிலின் ஸ்க்ரீன் ஷாட், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read | "இது என்ன இப்டி இருக்கு?!.." டைனோசர் அழிஞ்ச இடத்துல கண்டறியப்பட்ட ராட்சத உயிரினம்.. மிரண்டு போன ஆய்வாளர்கள்

KERALA, STUDENTS, LEAVE, COLLECTOR, REQUEST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்