நான்காம் கட்ட ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதிலும் பல்வேறு பகுதியிலுள்ள புலம்ப்பெயர் தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்குள் ஆகி வருகின்றனர். வருமானமும், தொழிலும் இல்லாத காரணத்தால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பல நூறு கிலோமீட்டர் நடந்தே பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் புலம் பெயர் தொழிலாளர் ஒருவரின் ஆறு வயது மகள் லாரியில் அடிபட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 13 பேர் கொண்ட புலம்பெயர் தொழிலார்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தின் சீதாப்பூர் மாவட்டத்திற்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது வழியில் வந்த லாரியில் லிப்ட் கேட்டு தொழிலாளர்கள் கொஞ்சம் தூரம் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து லாரியில் இருந்து இறங்கி மற்றொரு பேருந்தில் ஏற முற்பட்ட போது, தொழிலாளர் ஒருவரின் ஆறு வயது மகள் லாரியில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். சிறுமி பலியானதை தொடர்ந்து லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வரும் நிலையில் சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் ஏற்பாடை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
நாள்தோறும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடந்து வரும் இது மாதிரியான சம்பவங்கள் மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- லாரி விபத்தில் பலியான ‘தாய்’.. கதறியழுத ‘கைக்குழந்தை’.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..!
- ‘பட்டப்பகலில்’ அரசியல் பிரமுகர், அவரது மகன் ‘சுட்டுக்கொலை’.. நெஞ்சை பதறவைத்த வீடியோ..!
- 'திறந்த' லாரியில் தொழிலாளர்கள் 'சடலங்களுடன்' பயணம்... ஒட்டுமொத்த நாட்டையும் 'உலுக்கிய' சம்பவம்!
- ‘லாரி டயர் வெடித்து விபத்து’.. 3 வெளிமாநில தொழிலாளர்கள் பலி.. அடுத்தடுத்து நடக்கும் சோகம்..!
- "13.5 கோடி இந்தியர்களுக்கு வேலை பறிபோகும்!".. "இதுலயும் 12 கோடி பேரின் நிலை இதுதான்!".. 'வயிற்றில் புளியைக் கரைக்கும் அறிக்கை'!
- என் ஒன்றரை 'வயசு' மவனோட மொகத்த... கடைசியா ஒரு 'தடவ' பாக்க முடிலயே... உறையவைத்த புகைப்படம்!
- லாரியில் 'நின்றுகொண்டே' பயணம்... நடுவழியில் 'இறக்கி' விடப்பட்ட கொடுமை... உயிர் 'நண்பனுக்கு' நேர்ந்த துயரம்!
- 200 கிமீ நடந்து ‘கால் வலி’.. ‘லிப்ட்’ கேட்டு லாரியில் ஏறிய அரைமணி நேரத்தில் விபத்து’.. 24 பேர் பலியான கோரவிபத்தின் பகீர் பின்னணி..!
- இந்தியாவில் 5 லட்சம் பேர் ‘இதுக்காக’ காத்திருக்காங்க.. எல்லாத்துக்கும் காரணம் ‘கொரோனா’.. வெளியான ‘ஷாக்’ ரிப்போர்ட்..!
- "சீனாவை முந்திட்டோமா...?" "என்ன சார் சொல்றிங்க..." "எதுல முந்திட்டோம்...?"