வெளிநாடு வேலை.. அரபு நாடுகளில் வேலைக்கு போக விருப்பமா.. சிவகார்த்திகேயன் சொல்வதை கேளுங்க
முகப்பு > செய்திகள் > இந்தியாவெளிநாடு செல்லும் தமிழர்கள், எப்படி எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்பது பற்றி, நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாழும் பெரும்பாலான மக்கள், பல்வேறு வெளிநாடுகளில் வேலைக்கு சென்று, சிறந்தவொரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என கனவு காண்கின்றனர்.
தங்களின் முழு உழைப்பையும் செலுத்தி, உயிரைக் கொடுத்து, தங்களின் குடும்பத்தின் நலனுக்காகவும் பாடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டுக்கு சென்றால், எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதால், வெளிநாட்டிற்கு செல்ல பல்வேறு வழிகளையும் தேடுகின்றனர் மக்கள்.
தவறான வழிகள்
அப்படி வெளிநாடு அழைத்துச் செல்ல பல்வேறு ஏஜெண்ட்டுகளின் வழிகளையும் அவர்கள் நாடுகின்றனர். அப்படி அவர்களின் உதவியை நாடும் போது, சில சட்ட விரோதமான வழிகளை கடைபிடிக்கவும் செய்கின்றனர். இதனால், அவர்களின் வேலை வாய்ப்பும், எதிர்காலமும் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.
விழிப்புணர்வு வீடியோ
அது மட்டுமில்லாமல், இப்படிப்பட்ட தவறான ஏஜெண்ட்டுகள் மூலம், தவறான தொழில்களுக்காக பலர் நாடு கடந்து சென்று சிக்கிக் கொள்ளவும் செய்கின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை, கத்தார் நாட்டின் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் அறிவுரை
இதில், நடிகர் சிவகார்த்திகேயன், தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளில் செல்வோருக்கான விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார். 'எப்பொழுதும் வெளிநாட்டு வேலைக்கு செல்வோர், அதற்கான தகுந்த பயிற்சியினை மேற்கொண்டு, பதிவு செய்யப்பட்ட வழிகளை பயன்படுத்த வேண்டும். சட்ட விரோதமான ஏஜெண்ட்டுகளின் வலையில் விழாமல் இருக்க, நேர்மையான பதிவு செய்யப்பட்ட ஏஜெண்ட்டுகளின் வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
எச்சரிக்கையாக இருங்கள்
அவர்களின் வழியைப் பெற, 'E Migrate' இணையதளத்தின் உதவியை நாடுங்கள். வெளிநாட்டில் பிரச்சனைகள் நேரும் போது, நம் இந்திய தூதரகத்தின் உதவியை நாட வேண்டும்.
மேலும், வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், தங்களின் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைகளின் நகல்களை குடும்பத்தினரிடம் கொடுத்து விட்டு செல்லுங்கள்' என இந்த விழிப்புணர்வு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தடுப்பூசி போட்டே ஆகணும்.. ஒட்டகத்தில் வலம் வரும் பெண் பணியாளர்.. குவியும் வாழ்த்துக்கள்..
- 'ஐபிஎல் 2022' மெகா ஏலம் எப்போது நடைபெறும்?.. வெளியான 'லேட்டஸ்ட்' தகவல்..
- இந்தியால 7 லட்சம் பேர் 'கார்' புக் பண்ணிட்டு டெலிவரிக்கு வெயிட் பன்றாங்க...! - என்ன காரணம்...?
- "ஆஹா, இந்த மாப்பிள்ளைய எங்கயோ பாத்த மாதிரி இருக்கே?!.." திருமணத்திற்கு பின் காத்திருந்த 'ட்விஸ்ட்'!!.. வெளியான 'பகீர்' மோசடி..
- இந்தியால நேத்து 'ஒருநாள்' மட்டும் 'இத்தனை' பேருக்கு ஓமிக்ரான் வைரஸா...? - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சகம்...!
- பெட்ரோல் விலைக்கு செக்...! 'அமெரிக்கா உள்பட 3 நாடுகளுக்குள் நடந்த மீட்டிங்...' - இந்தியா அதிரடி முடிவு...!
- புதிய 'ஒமிக்ரான்' வைரஸ் வேற கண்டுபிடிச்சிருக்காங்க...! இந்தியால 'மூணாவது' அலைக்கு வாய்ப்பு இருக்கா...? - மருத்துவ நிபுணர் தெரிவித்த 'முக்கிய' தகவல்...!
- நீங்க ஜெய்ச்சு 'எங்க' கூட 'ஃபைனல்' விளையாடணும்...! 'அங்க உங்கள வச்சு செய்யணும்...' 'அதான் என்னோட ஒரே ஆசை...' - இந்தியாவை சீண்டும் முன்னாள் வீரர்...!
- திறமை இருந்தும் 'ஏன்' தோக்குறாங்க...? அதுக்கு 'ஒரு விஷயம்' தேவைப்படுது...! 'அது நம்ம ஆளுங்க கிட்ட சுத்தமா இல்ல...' - தொடர் தோல்விக்கு முன்னாள் வீரர் கூறும் 'ஒரே' காரணம்...!
- 'எங்க கூட மேட்ச் நடக்குறப்போ...' ஒட்டுமொத்த இந்தியாவே 'டிவி' முன்னால உட்கார்ந்துருக்கும்...! 'ஸோ, உங்களுக்கு தான் பிரச்சனை...' 'எங்களுக்கெல்லாம் இது ஒரு மேட்டரே இல்ல...' பாகிஸ்தான் முன்னாள் வீரர்...!