'எனது மகனை இழந்து விட்டேன்'... 'பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள பிரபல அரசியல் தலைவரின் பதிவு'... அரசியல் உலகை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனால் ஏற்படும் மரணங்கள் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்து வருகிறது.

நாடு முழுவதும் பாரபட்சமின்றி பல்வேறு தரப்பினரையும் கொரோனா வைரஸ் பாதித்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் தினந்தோறும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா பொதுமக்கள் முதல் பல பிரபலங்கள் எனப் பாரபட்சமின்றி பலரது உயிரைக் காவு வாங்கி வருகிறது. அந்த வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சீதாராம் யெச்சூரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''இன்று காலை எனது மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி கோவிட்-19 தொற்றுக்குப் பலியாகி இருக்கிறார். இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. இந்த தருணத்தில் எங்களுக்கு நம்பிக்கை அளித்த அனைவருக்கும், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

நாளிதழ் ஒன்றில் ஆஷிஷ் யெச்சூரி பணியாற்றிவந்த சூழலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 34 வயதான  ஆஷிஷ் யெச்சூரி, கடந்த இரண்டு வாரங்களாக வைரஸ் பாதிப்பிற்கு தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகவும், படிப்படியாகத் தேறி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக இன்று காலை 5.30 மணிக்கு திடீரென ஆஷிஷ் யெச்சூரி உயிரிழந்துள்ளார். மகன் ஆஷிஷ் யெச்சூரி உயிரிழந்துள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் சீதாராம் யெச்சூரிக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்