Shraddha Aftab case : அஃப்தாப்க்கு பாலிகிராஃப் டெஸ்ட்..! ஷ்ரத்தா வழக்கில் மேலும் பல அதிர்ச்சி உண்மைகளுக்கு வாய்ப்பா..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா கொலை சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளது. குற்றவாளி அஃப்தாப் குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Advertising
>
Advertising

Also Read | "கடுமையான தண்டனை கிடைக்கணும்".. நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா வழக்கு.. உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிரடி..!

டெல்லியில் தனது காதலருடன் இணைந்து வாழ்ந்து வந்த இளம்பெண் ஷ்ரத்தா திடீரென நீண்ட நாளாக காணாமல் போனதை அடுத்து ஷ்ரத்தாவின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஷ்ரத்தாவுடன் அஃப்தாப் லிவிங் டுகெதர் ரிலேஷனில் இருந்து வந்ததும், ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அஃப்தாப்பை வற்புறுத்தியதால் ஆத்திரத்தில் ஷ்ரத்தாவை கொலை செய்த அஃப்தாப் அவருடைய உடலை 35 பாகங்களாக வெட்டி, ஃபிரிட்ஜில் வைத்திருந்ததாகவும் அவரே விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

அவர் மீது IPC 302 (கொலை), 201 (தடயங்களை அழிக்க முயற்சித்தல்) ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி தினமும் இரவு ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை எடுத்துச் சென்று டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வீசிய அஃப்தாப் ஷ்ரத்தாவின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டதை அடுத்து சிக்கியுள்ளார். இதனிடையே ஷ்ரத்தாவை கொன்ற பிறகு அவரது உடலை ஃப்ரிட்ஜ் ஒன்றை புதிதாக வாங்கி அதற்குள் வைத்திருந்தார் அஃப்தாப். அதே போல, ஷ்ரத்தா உடல் வீட்டில் இருக்கும் போதே வேறொரு பெண்ணை வீட்டிற்கு அஃப்தாப் அழைத்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

எனினும் ஷ்ரத்தாவின் சில முக்கிய உடல் பாகங்கள் இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவரது செல்போனை மும்பையில் வீசியதாக அஃப்தாப் தெரிவித்துள்ளார். அந்த போனும் இன்னும் கிடைக்கவில்லை. முன்னதாக அஃப்தாப்க்கு உண்மை கண்டறியும் நார்கோ அனாலிசிஸ் சோதனை நடத்தப்பட டெல்லி போலீஸ் தரப்பில் அனுமதி கோரப்பட்டபோது, இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதனை தொடர்ந்து அஃப்தாப்க்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரிஸ்கான இந்த சோதனைக்கு அஃப்தாபின் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதால், அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறாரா என்பதை கண்டறியும் பாலிகிராப் சோதனை அவருக்கு நடத்தப்பட்டுள்ளது. இதில் அஃப்தாப் நல்ல உடல்நிலையுடன் இருப்பது ஊர்ஜிதமானதாக தெரிகிறது. இதனை அடுத்து அவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாக சொல்லப்படுவதை அடுத்து இவ்வழக்கு மேலும் கவனம் பெற்று வருகிறது.

Also Read | ஓடும் ரயிலில் இருந்து ராணுவ வீரரை தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகருக்கு பிடிவாரண்ட்.!

SHRADDHA MURDER CASE, AFTAB UNDERGONE POLYGRAPH TEST, SHRADDHA AFTAB, ஷ்ரத்தா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்