"முன்னாடியே அதை செய்யணும்னு நெனச்சேன்.. ஆனா".. நடுங்க வச்ச ஷ்ரத்தா வழக்கு.. கைதான காதலன் கொடுத்த அதிரவைக்கும் வாக்குமூலம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாட்டையே நடுங்க வைத்திருக்கும் ஷ்ரத்தா எனும் இளம்பெண் கொலை வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Also Read | 2024 அமெரிக்க அதிபர் தேர்தல்.. போட்டியிடுவதாக அறிவித்த டொனால்ட் ட்ரம்ப்..!
மும்பையில் உள்ள தனியார் கால்சென்டர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார் 26 வயதான ஷ்ரத்தா எனும் இளம்பெண். அப்போது, அவருக்கு அறிமுகமாகியுள்ளார் அஃப்தாப் அமீன் பூனாவாலா. நண்பர்களாக இருவரும் பழகிய நிலையில் நாளடைவில் இருவருக்கிடையே காதல் மலர்ந்ததாக தெரிகிறது. ஆனால் ஷ்ரத்தாவின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். ஆகவே, மே மாத துவக்கத்தில் காதலனுடன் டெல்லிக்கு குடியேறிய ஷ்ரத்தா அஃப்தாப்-உடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனிடையே அவ்வப்போது தனது தந்தையிடம் பேசிவந்திருக்கிறார் ஷ்ரத்தா. ஆனால், ஒருகட்டத்தில் ஷ்ரத்தாவிடம் இருந்து போன்கால்கள் வராததால் அவருடைய தந்தை சந்தேகமடைந்திருக்கிறார். இதனையடுத்து, கடந்த 8 ஆம் தேதி ஷ்ரத்தா வசித்து வந்ததாக சொல்லப்படும் வீட்டிற்கு சென்ற ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் வீடு பூட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதனை தொடர்ந்து மெஹ்ரவ்லி பகுதி காவல் நிலையத்தில் அஃப்தாப் தனது மகளை கடத்திவிட்டதாக புகார் அளித்திருக்கிறார்.
இதனையடுத்து காவல்துறையினர் கடந்த 12 ஆம் தேதி அஃப்தாபை கைது செய்திருக்கின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அஃப்தாபை வற்புறுத்தியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அஃப்தாப், ஷ்ரத்தாவை கொலை செய்து அவருடைய உடலை 35 பாகங்களாக வெட்டி, ஃபிரிட்ஜில் வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமும் இரவு 2 மணியளவில் உடல் பாகங்களை எடுத்துச் சென்று டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அஃப்தாப் வீசியதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும், ஷ்ரத்தாவின் கொலை மே 18 அன்று நடந்திருப்பதாக தெற்கு டெல்லி DCP அங்கித் சவுகான் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அஃப்தாப் மீது IPC 302 (கொலை), 201 (தடயங்களை அழிக்க முயற்சித்தல்) ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், காவல்துறையினரிடத்தில்,"மே 18க்கு (ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் தேதி) சுமார் ஒரு வாரத்திற்கு முன்பே, அவரை (ஷ்ரத்தா) கொலை செய்ய நினைத்தேன். ஆனால், அன்று அவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் அழுதுகொண்டும் இருந்தார். ஆகவே நான் பின்வாங்கிவிட்டேன்" எனத் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இதனிடையே, ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் 12 பாகங்கள் கண்டுடிபிடிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது தலை இன்னும் போலீசாரால் கைப்பற்றப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read | சந்தேகமா?.. விராட் கோலி மேலயா?.. ICC பகிர்ந்த தெறி வீடியோ.. குளிர்ந்து போன கோலி ரசிகர்கள்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பெற்றோரிடம் ஷ்ரத்தா பேசிய கடைசி வார்த்தைகள்.. நாட்டையே உலுக்கிய கோரம்.. அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்..!
- "நாட்டையே உலுக்கிய கோரம்".. ஷ்ரத்தா உடல் பாகங்கள் வீட்டில் இருக்கும் போதே வேறொரு பெண்ணை அழைத்து வந்த வாலிபர்.. திடுக் பின்னணி!!
- "என் மகளை கொன்னவன தூக்குல போடுங்க".. இந்தியாவையே உலுக்கிய ஷ்ரத்தா வழக்கு.. கண்ணீர் மல்க பேசிய தந்தை..!
- லிவிங் டுகெதரில் வாழ்ந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. காதலனின் ஆன்லைன் History-ஐ பார்த்துட்டு அதிர்ந்த அதிகாரிகள்..!
- ராத்திரி நேரத்துல பிளாஸ்டிக் பையோட சுற்றிய வாலிபர்.. லிவிங் டுகெதரில் இருந்த மகளை தேடிப்போன அப்பாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இந்தியாவையே திகைக்க வச்ச சம்பவம்..!
- வேலை தேட போறேன்னு மனைவியை கொண்டு போய்.. பணத்துக்கு விற்பனை செய்த கொடூர கணவன்.. இளம்பெண்ணின் போன் காலால் நடுங்கிய குடும்பம்!!
- இளம்பெண்ணைக் கொன்று.. சமூக வலைத்தளத்தில் வீடியோ பகிர்ந்த வாலிபர்..!! திடுக்கிட வைக்கும் பின்னணி!!
- வீட்டுக்கு வந்தப்போ போனில் பேசிக் கொண்டிருந்த மனைவி?.. திடீர்ன்னு வெளிய வந்து கணவன் சொன்ன விஷயம்.. திடுக்கிடும் பின்னணி!!
- "என்னை கல்யாணம் செஞ்சுக்க..இல்லைன்னா".. தோழியின் வீட்டில் ரகளை செய்த இளம்பெண்.. குழம்பிப்போன குடும்பத்தினர்.!
- எங்க கொண்டுவந்து நிறுத்திருக்க பாத்தியா.. நடுரோட்டில் பர்த்டே கேக் வெட்டிய ரக்கடு பாய்.. ஸ்பாட்லயே போலீஸ் கொடுத்த தண்டனை.. வீடியோ..!