"நாட்டையே உலுக்கிய கோரம்".. ஷ்ரத்தா உடல் பாகங்கள் வீட்டில் இருக்கும் போதே வேறொரு பெண்ணை அழைத்து வந்த வாலிபர்.. திடுக் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவையே அதிர வைத்துள்ள இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் அஃப்தாப் குறித்து தெரிய வந்துள்ள தகவல், கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் உள்ள தனியார் கால் சென்டர் நிறுவனம் ஒன்றில் 26 வயதான ஷ்ரத்தா பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, அவருக்கு அஃப்தாப் அமீன் பூனாவாலா என்ற இளைஞர் அறிமுகமாகி உள்ளார். நண்பர்களாக இருவரும் பழகிய நிலையில் நாளடைவில் இருவருக்கிடையே காதல் மலர்ந்ததாக தெரிகிறது.
ஆனால், அதே வேளையில் ஷ்ரத்தாவின் பெற்றோர்கள் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், காதலனுடன் டெல்லிக்கு குடியேறிய ஷ்ரத்தா அமீனுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து, சமீபத்தில் தனது வீட்டினருடன் பேசுவதையும் ஷ்ரத்தா நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இதற்கு மத்தியில், கடந்த நவம்பர் 8 ஆம் தேதி ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் மதான் டெல்லிக்கு சென்றிருக்கிறார். தனது மகள் இருக்கும் இடத்தை அறிந்து அவரை பார்ப்பதற்காக அங்கு செல்லவே, மகள் தங்கி வந்த வீடு பூட்டியிருப்பதை கண்டு சந்தேகம் அடைந்திருக்கிறார். இதனை தொடர்ந்து மெஹ்ரவ்லி பகுதி காவல் நிலையத்தில் அமீன் தனது மகளை கடத்திவிட்டதாக புகார் அளித்திருக்கிறார்.
இதனையடுத்து காவல்துறையினர் கடந்த 12 ஆம் தேதி அமீனை கைது செய்திருக்கின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அமீனை வற்புறுத்தியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அமீன், ஷ்ரத்தாவை கொலை செய்து அவருடைய உடலை 35 பாகங்களாக வெட்டி, ஃபிரிட்ஜில் வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமும் இரவு 2 மணியளவில் உடல் பாகங்களை எடுத்துச் சென்று டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அமீன் வீசியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து, காவல்துறையின் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வந்தனர்.
இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. ஷ்ரத்தாவை கொலை செய்த பிறகு, ரத்த கறையை போக்குவது மற்றும் உடல் பாகங்களின் இயக்கம் குறித்து அமீன் இணையத்தில் தேடியதாக சொல்லப்படுகிறது. மேலும், தனது வீட்டிற்கு அருகில் இருந்த கடையில் இருந்து ஃபிரிட்ஜ் ஒன்றை வாங்கிய அமீன் அதில் ஷ்ரத்தாவின் உடலை பத்திரப்படுத்தி வைத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, அமீன் மீது IPC 302 (கொலை), 201 (தடயங்களை அழிக்க முயற்சித்தல்) ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இளம்பெண்ணை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்திருந்த இளைஞர் குறித்த செய்தி, நாட்டையே நடுங்க வைத்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர். அப்படி ஒரு சூழலில், அஃப்தாப் குறித்து தெரிய வந்த மற்றும் ஒரு தகவல், இன்னும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
ஷ்ரத்தாவை கொலை செய்து அவரது உடலை ஃபிரிட்ஜில் வைத்திருந்த சமயத்தில் வேறொரு இளம்பெண்ணையும் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் அஃப்தாப். மேலும் அந்த பெண் வரும் போது ஃபிரிட்ஜில் இருந்த உடலை அலமாரி உள்ளிட்ட இடங்களில் பூட்டி வைத்து துர்நாற்றம் வராமல் இருக்கும் அளவுக்கும் இதனை செயல்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த தகவல் தற்போது கிடைத்துள்ளதால் வேறு பெண்கள் யாரையும் அஃப்தாப் அழைத்து வந்துள்ளாரா?, அவர்கள் யாரவது கொலைக்கு உதவினார்களா உள்ளிட்ட கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலி உடலை ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டு அங்கே வேறொரு பெண்ணையும் இளைஞர் அழைத்துக் கொண்டு வந்த விஷயம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ராத்திரி நேரத்துல பிளாஸ்டிக் பையோட சுற்றிய வாலிபர்.. லிவிங் டுகெதரில் இருந்த மகளை தேடிப்போன அப்பாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இந்தியாவையே திகைக்க வச்ச சம்பவம்..!
- வேலை தேட போறேன்னு மனைவியை கொண்டு போய்.. பணத்துக்கு விற்பனை செய்த கொடூர கணவன்.. இளம்பெண்ணின் போன் காலால் நடுங்கிய குடும்பம்!!
- இளம்பெண்ணைக் கொன்று.. சமூக வலைத்தளத்தில் வீடியோ பகிர்ந்த வாலிபர்..!! திடுக்கிட வைக்கும் பின்னணி!!
- வீட்டுக்கு வந்தப்போ போனில் பேசிக் கொண்டிருந்த மனைவி?.. திடீர்ன்னு வெளிய வந்து கணவன் சொன்ன விஷயம்.. திடுக்கிடும் பின்னணி!!
- "என்னை கல்யாணம் செஞ்சுக்க..இல்லைன்னா".. தோழியின் வீட்டில் ரகளை செய்த இளம்பெண்.. குழம்பிப்போன குடும்பத்தினர்.!
- எங்க கொண்டுவந்து நிறுத்திருக்க பாத்தியா.. நடுரோட்டில் பர்த்டே கேக் வெட்டிய ரக்கடு பாய்.. ஸ்பாட்லயே போலீஸ் கொடுத்த தண்டனை.. வீடியோ..!
- பூட்டிய ரயில் கழிவறைக்குள் சடலமாக கிடந்த நபர்.. 900 கிமீ கடந்த பிறகு தெரிய வந்த உண்மை!!.. குலை நடுங்கிப்போன பயணிகள்
- பேருந்தில் சோகம்.. மனைவியின் சடலத்துடன் பணமின்றி தவித்த கணவர்.. நெகிழவைத்த போலீஸ் அதிகாரி.. வீடியோ..!
- வரதட்சணையாக கிடைத்த கார்.. கல்யாணம் பண்ண கையோட மாப்பிள்ளை செஞ்ச விஷயம்.. சோகத்தில் மூழ்கிய திருமண வீடு..!
- தாய்மையை போற்றிய பெண் காவலர்.. முகமறியாத குழந்தைக்கு தாயான நெகிழ்ச்சி சம்பவம்..!