இனிமேல் 'இந்த' கடைகளும் இயங்கலாம்... மத்திய அரசு அனுமதி... முழுவிவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஊரடங்கு நேரத்தில் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க வேண்டும் என முன்னதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஊரடங்கால் சிறு தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதால் தற்போது மேலும் சில தொழில்களுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

பாடப்புத்தகம் விற்பனை செய்யும் கடைகள், மின்விசிறி விற்பனை செய்யும் கடைகள், செல்போனுக்கான ரீசார்ஜ் செய்வதற்கான கடைகளை திறக்கலாம். நகர்ப்புறங்களில் உள்ள ரொட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள், மாவு அரைக்கும் நிலையங்கள், பால் பதப்படுத்தும் நிலையங்கள் போன்றவை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. முதியோர்களுக்கான சேவையில் இருப்பவர்கள் பணி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

வேளாண் மற்றும் தோட்டக்கலை தொடர்புடைய ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான சேமிப்பகங்கள், வேளாண்- தோட்டக்கலை ஆராய்ச்சி மையங்கள் செயல்படலாம். செடிகள் மற்றும் தேன் வளர்ப்பு தொடர்பான நடவடிக்கைகளை மாநிலத்துக்குள்ளும், மாநிலங்கள் இடையேயும் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

வனத்துறை அலுவலகங்கள் இயங்கலாம். அனைத்து இடங்களிலும் பணியாளர்கள், ஊழியர்களிடையே சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய துறை முகங்களில் வர்த்தக ரீதியிலான கப்பல் போக்குவரத்து ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்