‘இப்படியே போனா சரிப்பட்டு வராது’.. வேகமாக அதிகரிக்கும் கொரோனா பரவல்.. கேரள அரசு அதிரடி நடவடிக்கை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சில மாநிங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கேரள மாநிலத்தில் நோய் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி முதல் நாளொன்றுக்கு நோய் தொற்றின் எண்ணிக்கை 20,000 தாண்டி வருகிறது. நேற்று 1 லட்சத்துக்கும் அதிகமானோரின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 23,676 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழுவை நியமித்திருந்தார். இந்த குழு நேற்று முதல்வரிடம் அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கை தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார்.

அதன்படியில், நாளை (05.08.2021) முதல் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சுதந்திர தினம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 15 மற்றும் ஆகஸ்ட் 22-ம் தேதி ஆகிய இரு ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் 7 நாட்களில் குறைந்தது ஆயிரம் பேரிடம் பரிசோதனை செய்து, தொற்று அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்