'ரேஷன் கடை இல்லை!'.. 'ரொம்ப நாள் கழித்து திறக்கப்பட்ட பான் பீடா கடை!'... 'காற்றில் பறந்த தனிமனித இடைவெளி!'... வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வெகுநாட்களுக்கு பிறகு பான் பீடா புகையிலை கடையைத் திறந்ததும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் புகையிலை பிரியர்கள் அலைமோதிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குஜராத்தில் உள்ள சையாலா தாலுகா சுரேந்திரநகருக்குட்பட்ட சுடாமா கிராமத்தில் நீண்ட நாட்களுக்கு பின் பீடா பான் மசாலா, குட்கா விற்பனைக் கடையை, கடை ஓனர் திறந்ததால், அலைமோதிய புகையிலை பிரியர்கள், கடையின் மேல் ஈக்கள் போல் மொய்த்து அலப்பறை செய்த வீடியோ இணையத்தில் வெகுவேகமாக பரவி வருகிறது.

கொரோனா பரவல் தடுப்பு காரணமாக மூன்றாவது பொதுமுடக்க நீட்டிப்பு அறிவிப்பு தற்போது அமலில் உள்ளது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை அனுமதி இன்றி 42 வயதான ரமேஷ் மேஹ்ரானி என்பவர் தனது புகையிலை விற்கும் பெட்டிக்கடையை திறந்ததும், தனி மனித இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட புகையிலை பிரியர்கள், கடையில் புகுந்து தங்களுக்கான பான் பீடா புகையிலைகளை வாங்க முயற்சித்துள்ளனர்.

இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யல்பட்டதோடு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும்

இதுபற்றிய பேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்