நமக்கு இருக்குற 'ஒரே வழி' அது தான்...! 'அதுல' மட்டும் தான் 'செக்' பண்ண மாட்டாங்க...! கப்பலுக்குள்ள 'ட்ரக்ஸ்' கொண்டு போனது எப்படி...? - வெளிவந்துள்ள 'அதிர' வைக்கும் உண்மைகள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் உபயோகப்படுத்திய வழக்கில் ஷாருக்கான் மகன் A-1 குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக போதைத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த 3-ம் தேதி சொகுசு கப்பலில் அதிரடி சோதனை மேற்கொண்ட போது சுமார் 1.33 லட்ச ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.

இந்த வழக்கில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு, பிரபல இந்தி சினிமா தயாரிப்பாளர் இம்தியாஸ் ஹத்ரியின் வீடு மற்றும் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

பாலிவுட்டை அதிர செய்ய இந்த போதைப்பொருள் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக, அதாவது A1 குற்றவாளியாக ஷாருக்கான் மகன் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு காரணம் விசாரணையின் போது ஆர்யன் கானின் மொபைல் போனை சோதித்து பார்த்ததில் வெளிநாட்டு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் சங்கேத மொழியில் வாட்ஸ் அப் மூலம் அவர் பேசியது உறுதிப்படுத்தபட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து பாதுகாப்பு சோதனை நிலையங்கள் இருந்தும் எப்படி பல லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கப்பலுக்குள் சென்றது என விசாரிக்கையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் வெளியிட்ட அறிக்கையில், 'இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், நாப்கினுக்குள் அடைத்து போதைப் பொருட்களை சொகுசுக் கப்பலுக்கு கொண்டு சென்றுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகளும் நாப்கின் என்பதால் பரிசோதனை செய்யாமல் விட்டுள்ளனர். அதன்பின் அதிலிருந்த போதைப் பொருளை அங்குள்ளவர்களுக்கு விநியோகித்து உள்ளனர்' என்ற அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்து உள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்