மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே..! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா முதல்வராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்றார்.
கடந்த 26ம் தேதி மகாராஷ்டிரா முதல்வர் பதவியை பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தனர். இதனை அடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் இணைந்து ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க கோரினர். மேலும் தங்களுக்கு ஆதரவாக உள்ள 166 எம்.எல்.ஏக்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் அளித்தனர்.
இந்நிலையில் இன்று (28.11.2019) மகாராஷ்டிரா மாநில முதல்வராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முகமது பட்டேல் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்