'கெத்தா ஸ்டியரிங் வீலை புடிச்சு'...'அரசு பேருந்தை ஓட்டிய பெண் ஐஏஎஸ் அதிகாரி'...'அதிரடி காரணம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அரசு பேருந்தை ஓட்டி சென்ற சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

(Bangalore Metropolitan Transport Corporation (BMTC) பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருபவர் ஷிகா ஐஏஎஸ். பல அதிரடிகளுக்கு பெயர் பெற்ற இவர், கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பிஎம்டிசியின் நிர்வாக இயக்குனராக ஷிகா பொறுப்பேற்று கொண்டார். அன்று முதல் நிர்வாக ரீதியாக பல்வேறு சீர்திருத்தங்களை அவர் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பிஎம்டிசி பேருந்துகளில் சமீப காலமாக அடிக்கடி பிரேக் ஃபெயிலியர் ஏற்பட்டு வருவதாகவும், இது சாலை விபத்துக்களுக்கு வழி வகுப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பிஎம்டிசி நிர்வாக இயக்குனர் ஷிகாவிற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனை சரி செய்ய முடிவு செய்த ஷிகா, நேரடியாக அவரே களத்தில் இறங்கி பஸ்ஸை ஓட்டி பார்த்து சோதனை செய்துள்ளார்.

ஹோஸ்கோட் பயிற்சி மையத்திற்கு நேராக வந்த ஷிகா, வால்வோ பஸ்ஸை ஓட்டி சோதனை செய்தார். அப்போது அங்கிருந்த பிஎம்டிசி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வியப்படைந்தார்கள். மொத்தம் 6,400 பேருந்துகளை வைத்திருக்கும் பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்தில், 4,000 டிரைவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதில் முழுக்க ஆண்கள் பணியாற்றி வரும் நிலையில், ஒரே ஒரு பெண் மட்டும் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். பிஎம்சிடி பெண் நிர்வாக இயக்குனரே அந்த பேருந்தை ஓட்டியிருப்பது தனக்கு பெருமை என அந்த பெண் இயக்குனர் கூறியுள்ளார்.

இதனிடையே பிஎம்டிசி பேருந்துகளில் தினமும் பல லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிஎம்டிசியின் பெண் இயக்குனரே பேருந்தை ஓட்டி சோதனை செய்திருப்பது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

IAS, BMTC MD, C SHIKHA IAS, VOLVO BUS, BANGALORE, TEST DRIVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்