"அதுங்க குடும்பத்துல ஒரு ஆள் மாதிரி"..எல்லா வீட்டுலயும் நல்ல பாம்பு.. இந்தியாவுல இப்படி ஒரு கிராமமா..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் உள்ள ஒரு கிராம மக்கள் தங்களது வீட்டில் நல்ல பாம்புகளை அன்போடு வளர்த்து வருவது பலரையில் திகைக்க வைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | கடலில் மூழ்கிய பிரமாண்ட மிதவை ஹோட்டல்.. 50 வருசம் முன்னாடியே இவ்ளோ பணத்த இழைச்சு கட்டிருக்காங்களா?

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று பழமொழி உண்டு. அந்த வகையில் பாம்பை கண்டு அச்சம் கொள்ளாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பொதுவாக ஒருவரது வீட்டுக்குள் பாம்பு வந்துவிட்டால் உடனடியாக அக்கம் பக்கத்தில் ஆட்கள் திரண்டு பெரிய களேபரமே நடந்துவிடும். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் மக்கள் பாம்புகளோடு நெருங்கி பழகுகின்றனர். தங்களது வீட்டுக்குள் பாம்புகள் வந்தாலும் அவர்களுக்கு சிறிது அச்சமோ, படபடப்போ ஏற்படுவதில்லை. அதுமட்டுமல்லாமல் பாம்புகளை தங்களது வீட்டில் ஒருவர் போலவே கருதுகின்றனர் இந்த கிராம மக்கள்.

பாம்பு கிராமம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் சோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஷெட்பால் கிராமம். பூனேவில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் சிறுவர்கள் கூட பாம்புகளுக்கு பயப்படுவதில்லை. இங்குள்ள வீடுகளில் தங்கு தடையின்றி பாம்புகள் நுழைந்து செல்கின்றன. வீட்டினரும் அவற்றை கண்டு அச்சம் கொள்வதில்லை.

அதிலும், உலகில் மிகவும் விஷம் கொண்ட பாம்புகளில் ஒன்றாக கருதப்படும் நல்ல பாம்பு இந்த கிராமத்தில் ஏராளமாக வசித்து வருகின்றன. ஒரே வீட்டில் பல பாம்புகள் இருந்தாலும், இந்த மக்கள் அதனை பற்றி கவலை கொள்ளாமல் அதே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

குடும்பத்தில் ஒரு ஆள்

இந்த கிராம மக்கள் பாம்புகளை தங்களது வீட்டில் ஒரு உறுப்பினராகவே கருதுகின்றனர். அதனாலேயே கிராமத்தின் மூலை முடுக்குகளில் நல்ல பாம்புகள் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றன. இந்த கிராம மக்கள் பாம்புகளுக்காக தனியாக கோவில் ஒன்றையும் நிறுவியுள்ளனர். 'தேவஸ்தானம்' என்று அழைக்கப்படும் இந்த கோவிலிலும் ஏராளமான நல்ல பாம்புகள் வசிக்கின்றன.

எப்படி இந்த கிராமத்திற்கு இவ்வளவு பாம்புகள் வந்தன? என்ற கேள்விக்கு யாரிடத்திலும் விடை இல்லை. 'ஆதிமுதல் இப்படித்தான் வசித்து வருகிறோம்" என்கிறார்கள் இந்த வினோத கிராம மக்கள். இதனாலேயே இந்த கிராமத்தை பாம்பு கிராமம் என்று அழைக்கிறார்கள் மக்கள்.

Also Read | விண்வெளி வரலாற்றுல இப்படி ஒரு ரிஸ்க்-அ யாரும் எடுத்ததில்லை.. செம்ம தில்லுப்பா இவருக்கு.. நாசா பகிர்ந்த வைரல் புகைப்படம்..!

INDIA, SNAKE, SHETPHAL VILLAGE, COBRAS, COBRAS AND HUMANS LIVE TOGETHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்