"ஏதோ தப்பா நடக்குது".. உயிரிழந்த நடிகை இறுதி நிமிடத்தில் போனில் சொன்ன விஷயம்.. சகோதரி வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்தவரும் பிஜேபி கட்சி பிரமுகருமான சோனாலி போகட் கடந்த திங்கட்கிழமை திடீரென மரணமடைந்த நிலையில், அவரது சகோதரி தெரிவித்திருக்கும் தகவல்கள் பலரையும் அதிர வைத்திருக்கின்றன.

Advertising
>
Advertising

Also Read | "இது பேட்ட பாயுற நேரம்".. தீவிர பயிற்சியில் இறங்கிய ரெய்னா.. வைரலாகும் வீடியோ.. பின்னணி என்ன??

சோனாலி போகட்

ஹரியானாவை சேர்ந்த சோனாலி போகட், தொலைக்காட்சி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து, டிக்டாக் செயலி மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான சோனாலி போகட், ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14 ஆவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டிருந்தார். இதன் காரணமாக, மக்கள் மத்தியில் இன்னும் பிரபலம் ஆனார் சோனாலி. அது மட்டுமில்லாமல், பாஜக கட்சியில் இணைந்த சோனாலி, கடந்த 2019 ஆம் ஆண்டு ஹரியானா சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார்.

அதிர்ச்சி

41 வயதான சோனாலி சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்ததாக தெரிகிறது. அப்போது உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அவர் மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் மாரடைப்பினால் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இதுபற்றி பேசிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்,"இந்த விஷயத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். காவல்துறை தலைவர் இந்த விஷயத்தில் நேரடியாக ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பிரேத பரிசோதனை அறிக்கைகள் முதலில் அனுப்பப்படும். முதற்கட்ட அறிக்கையின்படி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது" என்றார்.

போன்கால்

இந்நிலையில், இதுபற்றி சோனாலியின் சகோதரி ரூபேஷ் பேசுகையில்,"இறப்பதற்கு முந்தைய நாள் மாலை அவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் வாட்ஸப்பில் பேச வேண்டும் என்று சொன்னார். ஏதோ தவறாக நடக்கிறது என்று சொன்னார். பின்னர், அவர் அழைப்பை கட் செய்தாள். பின்னர் எடுக்கவில்லை. முறையான விசாரணையை சிபிஐ நடத்த வேண்டும் என்று கோருகிறோம். அவர் மாரடைப்பால் இறந்தார் என்பதை என் குடும்பத்தினர் ஏற்கத் தயாராக இல்லை. அவருக்கு அப்படியொரு மருத்துவப் பிரச்சனை இல்லை" எனக்கூறியிருக்கிறார்.

இந்நிலையில், சோனாலியின் மரணத்தில் சதேகத்திற்கிடமாக ஏதுமில்லை எனவும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகு இறப்புக்கான காரணம் தெரியவரும் என கோவா காவல்துறை தலைவர் ஜஸ்பால் சிங் தெரிவித்துள்ளார்.

Also Read | ஊர் முழுவதும் வறட்சி.. "11 கோடி வருச 'மர்மம்' வெளிய வந்துருக்கு".. ஆடி போன ஆராய்ச்சியாளர்கள்!!

SONALI PHOGAT, SONALI PHOGAT SISTER, BJP LEADER SONALI PHOGAT, BIGG BOSS SONALI PHOGAT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்