Video: படித்திருந்தாலும்.. அவர் 'சகோதரியை' தான் அழைத்தார்.. '100-க்கு' கால் செய்யவில்லை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெருத்த அதிர்வுகளை எழுப்பி உள்ளது. தற்போது அவரது மரணம் தொடர்பாக 4 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். பிரியங்கா மரணத்திற்கு நீதி வேண்டும் என, சமூக வலைதளங்களில் பலரும் பொதுமக்கள் பலரும் கொந்தளித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பிரியங்கா மரணம் குறித்து தெலுங்கானா மாநில உள்துறை அமைச்சர் மொஹம்மது மஹ்மூத் அலி பேட்டி அளித்திருக்கிறார். அதில், '' இந்த சம்பவத்தை நினைத்து நாங்கள் வருத்தம் கொள்கிறோம். குற்றங்கள் நடக்கிறது ஆனால் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து, குற்றங்களை கட்டுப்படுத்துகின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக அவர் தன்னுடைய சகோதரியை அழைத்துள்ளார். படித்தவராக இருந்தாலும் அவர் 100-க்கு காவல் செய்யவில்லை. ஒருவேளை போலீசை அழைத்திருந்தால் அவர் காப்பாற்றப்பட்டு இருக்கலாம்,'' என கருத்து தெரிவித்து இருக்கிறார். அவருடைய இந்த கருத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நெட்டிசன்கள் பலரும் அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Video Credit: ANI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்