வேலை செய்ய நாடாளுமன்றம் அட்ராக்டிவ் பிளேஸ் இல்லன்னு யாருங்க சொன்னா? சர்ச்சையான சசிதரூர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

லோக்சபா பணியாற்றுவதற்கு ஈர்க்கும் இடம் இல்லை என யார் சொன்னார்? என நாடாளுமன்ற பெண் எம்.பி-க்கள் உடன் எம்.பி சசி தரூர் பதிவிட்ட ட்வீட் பல சர்ச்சைகளைத் தேடித் தந்துள்ளது.

Advertising
>
Advertising

இன்று நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றது. இதனால் நாடாளுமன்றத்தில் அனைத்து எம்.பி-க்களும் ஆஜராகிவிட்டனர். சசி தரூர் எம்.பி பதிவிட்ட ட்வீட்டில், “யார் சொன்னது லோக்சபா பணியாற்றுவதற்கு ஈர்ப்பான இடம் இல்லை என்று? என் சக எம்.பி-க்கள் உடன் இன்று காலையில்” என எம்.பி-க்கள் சுப்ரியா சூலே, ப்ரெனித் கவுர், தமிழச்சி தங்கப்பாண்டியன், மிமி சக்கரபர்த்தி, நுஷ்ரத், ஜோதிமணி ஆகிய பெண் எம்.பி-க்களை டேக் செய்திருந்தார்.

சசி தரூரின் இந்த ட்வீட் பல எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வருகிறது. தமிழ்நாடு எம்.எல்.ஏ மற்றும் பாஜக மகளிர் அணித் தலைவியுமான வானதி ஶ்ரீநிவாசன், “நாடாளுமன்றத்துக்குள்ளேயே தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிகளை காட்சிப் பொருள் போல் காட்டியிருப்பது மிகவும் தாழ்ந்த செயல்.

பாலின ரீதியிலான இந்தக் கருத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன். காங்கிரஸ் கலாச்சாரத்தின் படிதான் அவர் நடந்து கொள்கிறார். பாஜக மகிளா மோர்சா கண்டனம் தெரிவிக்கிறது” என கண்டனம் தெரிவித்து இருந்தார்.

காலையில் பெண் எம்.பி-க்கள் உடனான புகைப்படம் போலவே மாலையில் ஆண் எம்.பி-க்கள் உடனான புகைப்புடத்தையும் சசி தரூரு வெளியிட்டு இருந்தார். பின்னர் காலையில் பெண் எம்.பி-க்கள் உடன் வெளியிட்ட புகைப்படம் நல்ல நகைச்சுவை உடன் பகிர்ப்பட்டதே என விளக்கமும் கொடுத்து இருந்தார். மேலும், இதனால் யாரும் காயம் அடைந்திருந்தால் மன்னிப்பும் கேட்டுக்கொள்வதாக சசி தரூர் தெரிவித்து உள்ளார்.

CONGRESS, SHASHI THAROOR, WOMEN MPS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்