அரசியலில் எதிரெதிர் அணி... முன்னுதாரணமான நிர்மலா சீதாராமன்.. சசி தரூர் நெகிழ்ச்சி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

'இந்திய அரசியலில் இதுபோன்ற விஷயங்கள் வளர வேண்டும்' என்று நிர்மலா சீதாராமன் தன்னை சந்தித்ததை நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளார் சதி தரூர்.

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சசி தரூர் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த குமணம் ராஜசேகரனும் களத்தில் உள்ளார். பாரதிய ஜனதா கட்சி சசிதரூருக்கு பலத்த போட்டி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், விஷூ பண்டிகையை முன்னிட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள காந்தாரி அம்மன் கோயிலில் நேற்று சசி தரூர் வாழைப்பழம் துலாபாரம் கொடுத்தார். எடைக்கு எடை வாழைப்பழம் கொடுத்த போது,  திடீரென்று தராசு உடைந்து சசிதரூர் மண்டையைத் தாக்கியது. அதில் அவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

உடனடியாக அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு சசி தரூர் கொண்டு செல்லப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கால்களிலும் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தலையில் தையல் போட்டுக் கட்டு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசி தரூரை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து நலம் விசாரித்தார். இது குறித்து ட்வீட் செய்துள்ள சசி தரூர், `தனது தேர்தல் பிரசாரப் பணிகளுக்கிடையே பாதுகாப்புத்துறை அமைச்சர் என்னை வந்து சந்தித்தது மகிழ்வை அளிக்கிறது. இதுபோன்ற விஷயங்கள் இந்திய அரசியலில் வளர வேண்டும் ''என்று குறிப்பிட்டுள்ளார்.

SHASHITHAROOR, NIRMALASEETHARAMAN

மற்ற செய்திகள்