VIDEO: தாலிபான் சொன்ன 'ஒத்த' வார்த்தையால... 'கேரளாவில் புயலாக கிளம்பிய சர்ச்சை...' - சசிதரூர் சொன்ன கருத்தால் 'மலையாளிகள்' கொந்தளிப்பு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

20 ஆண்டுகளுக்கு பின் தீவிரவாத அமைப்பான தாலிபான் ஆப்கானை கைப்பற்றியுள்ளது.  உலகமே உற்றுநோக்கி வரும் தாலிபான் அமைப்பில் மலையாளிகள் இருப்பதாக கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி சசிதரூர் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார். அதில், ட்விட்டரில் ரமீஸ் என்பவர், தாலிபான்கள் பற்றிய வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், ஆப்கானின் தலைநகரமான காபுல் நகரை கைப்பற்றிய பின், தாலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மண்ணில் படுத்து முத்தமிடுகிறார். இன்னொருவர் அருகில் சென்று உணர்ச்சிவசப்பட்ட அந்த நபரை ஆறுதல் படுத்தி பேச சொல்லுகின்றனர்.

அப்போது அந்த வீடியோவின் 8-வது நொடியில் 'சம்சாரிக்கட்டே' (மலையாள வார்த்தை) என சொல்லுகிறார், மற்றொருவர் அதை புரிந்துக் கொள்கிறார்.

 

இதை பார்க்கும் போது அங்கு இரண்டு மலையாளி தாலிபான்கள் இருப்பதை போலத் தெரிகிறது என பரபரப்பு கருத்தை முன்வைத்தார். இந்த சம்பவம் மலையாள மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு இந்த சம்பவம் குறித்து பதில் தெரிவித்திருக்கும் ரமீஸ், 'தாலிபான் அமைப்பில் கேரளாவைச் சேர்ந்த யாரும் கிடையாது. இவர்கள் ஸாபுல் மாகாணத்தை சேர்ந்த பலூச்கள், இவர்கள் பிராஹ்வி (bragvi) எனும் மொழியில் பேசிக்கொள்கின்றனர். இந்த மொழி ஒரு திராவிட மொழி தான். தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்றது' என ரமீஸ் விளக்கம் அளித்துள்ளார்.

எம்.பி. சசி தரூர், அதற்கு மீண்டும், 'இது மிகவும் சுவாரஸ்யமான விளக்கம் தான். இது குறித்த ஆய்வயை மொழியியலாளர்கள் தான் சொல்ல வேண்டும். ஆனால் தாலிபான்களுடன் தவறாக வழிநடத்தப்பட்ட மலையாளிகள் இருந்திருக்கிறார்கள்' எனவும் பதிலளித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்