"அதுனால தான் எனக்கு சந்தேகம் வந்துச்சு".. ஷ்ரத்தா வழக்கில் முக்கிய ஆதாரமாக மாறும் வாட்டர் Bill.. வீட்டு உரிமையாளர் சொல்லிய அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவையே உலுக்கியுள்ள ஷ்ரத்தா கொலை வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
டெல்லியின் மெஹ்ரவ்லி பகுதியில் வசித்துவந்த ஷ்ரத்தா எனும் இளம்பெண்ணை காணவில்லை என அவருடைய தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். ஷ்ரத்தாவுடன் லிவிங் டுகெதரில் இருந்ததாக சொல்லப்படும் அஃப்தாப் என்பவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக ஷ்ரத்தாவின் தந்தை தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் கடந்த 12 ஆம் தேதி அஃப்தாபை கைது செய்திருக்கின்றனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அஃப்தாபை வற்புறுத்தியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அஃப்தாப், ஷ்ரத்தாவை கொலை செய்து அவருடைய உடலை 35 பாகங்களாக வெட்டி, ஃபிரிட்ஜில் வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமும் இரவு 2 மணியளவில் உடல் பாகங்களை எடுத்துச் சென்று டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அஃப்தாப் வீசியதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், அஃப்தாப் - ஷ்ரத்தா தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் சொல்லிய தகவல் வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஷ்ரத்தா தங்கியிருந்த பகுதியில் வீடுகளுக்கு 20,000 லிட்டர் தண்ணீர் இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதற்கும் அதிகமாக தண்ணீர் தேவைப்படுவோர் அதற்கான கட்டணத்தை செலுத்தவேண்டும். இந்நிலையில், அஃப்தாப் தண்ணீருக்கு 300 ரூபாய் கட்டணம் செலுத்தியது வீட்டு உரிமையாளருக்கு சந்தேகத்தை அளித்திருக்கிறது.
இதன்மூலம், உடல் பாகங்களை வெட்டும்போது சத்தம் வெளியே கேட்க்காமல் இருக்க எப்போதும் தண்ணீர் குழாய்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் இவ்வளவு தண்ணீரையும் கொண்டு, வீட்டில் இருந்த ரத்த கறைகளை கழுவவும் அஃப்தாப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி பேசிய ஷ்ரத்தா - அஃப்தாப் தங்கியிருந்த பிளாட் உரிமையாளர் ரோஹன் குமாரின் தந்தை ராஜேந்திர குமார்,"இவ்வளவு தண்ணீர் கட்டணம் ஆச்சர்யமாக இருந்தது. அதுவே சந்தேகத்தையும் வரவழைத்தது. பிளாட்டின் வாடகை 9000 ரூபாய். ஒப்பந்தத்தில் அவர்கள் இருவரது பெயரும் இருக்கிறது. மாதந்தோறும் 8 - 10 ஆம் தேதிக்குள் அஃப்தாப் ஆன்லைன் மூலமாக வாடகையை அனுப்பிவிடுவார். அதனால் நான் பிளாட்டுக்கு செல்லவேண்டிய தேவை இருக்கவில்லை" என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இப்டி தான் அன்னைக்கி ராத்திரி சண்டை நடந்துச்சு".. ஷ்ரத்தா கொலை வழக்கில் பகீர் கிளப்பிய அஃப்தாப்!!
- "முன்னாடியே அதை செய்யணும்னு நெனச்சேன்.. ஆனா".. நடுங்க வச்ச ஷ்ரத்தா வழக்கு.. கைதான காதலன் கொடுத்த அதிரவைக்கும் வாக்குமூலம்..!
- "கேரளா, டெல்லி".. 2 கொலைகள்.. இரண்டுக்கும் நடுவே இருந்த ஒற்றுமைகள்??... பீதியை ஏற்படுத்தும் பின்னணி!!
- "என் மகளை கொன்னவன தூக்குல போடுங்க".. இந்தியாவையே உலுக்கிய ஷ்ரத்தா வழக்கு.. கண்ணீர் மல்க பேசிய தந்தை..!
- 7 மாசமா கோமாவில் இருந்த பெண்ணுக்கு பிரசவம்.. தாய் மற்றும் சேயின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. நெகிழ்ச்சி பின்னணி..!
- 400 பேருடன் பயணித்த விமானம்.. நைட்ல அதிகாரிகளுக்கு வந்த ஒரு ஈமெயில்.. கொஞ்ச நேரத்துல மொத்த ஏர்போர்ட்டையும் பிளாக் பண்ணிட்டாங்க..!
- இவ்வளவு காஸ்ட்லியான வாட்ச் இதுவரை பிடிபட்டதே இல்ல... ஏர்போர்ட்டை பரபரக்க வைத்த பயணி.. அதிர்ந்துபோன அதிகாரிகள்..!
- திருமணம் ஆகி 8 மாதத்தில் அரங்கேறிய கொடூரம்.!.. "எவ்ளோ நாள் தான் தாங்குறது" - இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
- வீட்டுக்குள்ள இருந்து வந்த துர்நாற்றம்.. போலீசில் புகார் கொடுத்த அக்கம்பக்கத்தினர்.. மனநிலை பாதிக்கப்பட்ட மனைவியின் 18 மாத போராட்டம்..!
- "நான் செத்துட்டா உடலை அவங்ககிட்ட கொடுக்கக்கூடாது".. மனைவி மற்றும் மகள் மீது வழக்கு தொடுத்த அப்பா.. திகைக்க வைக்கும் காரணம்..!