ஹைதராபாத்தில் தங்கை கண்முன்னே... அக்காவை பாலியல் 'வன்கொடுமை' செய்த.... ஆட்டோ டிரைவர்கள்... என்கவுண்டர் பாயுமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவை  உலுக்கிய பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரையும் காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். இதைத்தொடர்ந்து பாலியல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களை 21 நாட்களுக்குள் தூக்கில் போடும் புதிய சட்டம் ஒன்றை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். இதற்கு சட்டசபையும் ஒப்புதல் அளிக்க, இந்த சட்டம் சமீபத்தில் அங்கு அமலுக்கு வந்தது.

இந்தநிலையில் பாட்டி வீட்டுக்கு செல்ல வழிதெரியாமல் தவித்த சகோதரிகளை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர்கள் இருவரை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 8-ம் தேதி 18 வயது இளம்பெண் மற்றும் அவரது 10 வயது சகோதரி ஆகிய இருவரும் தங்களுடைய பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அப்போது அவர்களுக்கு வழி தெரியாமல் தவித்துள்ளனர். இதைப்பார்த்த ஆட்டோ டிரைவர்கள் அன்வர், பெரோஸ் இருவரும் அவர்களுக்கு உதவுவதாக கூறி தங்களுடைய வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களின் அம்மா திட்ட, அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அருகில் இருந்த லாட்ஜ் ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

லாட்ஜில் தங்கை கண்முன்னே அக்காவை சகோதர்கள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதேநேரம் சகோதரிகள் இருவரையும் காணவில்லை என, அவர்கள் வீட்டினர் காவல்துறையில் புகார் செய்ய, மறுநாள் காலை சகோதரிகள் இருவரும் தங்கள் உறவினருக்கு கால் செய்து தாங்கள் இருக்குமிடத்தை கூறி, அவர்களின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் ஆட்டோ டிரைவர்கள் பெரோஸ், அன்வர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரியங்கா ரெட்டி மறைந்த வடு ஆறுவதற்குள் மீண்டும் ஹைதராபாத்தில் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளதால், தெலுங்கானா அரசு இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்