'தைரியமா' இருந்துக்கப்பா...! 'மனச தளர விட்டுராத...' நேரில் சந்தித்து ஆறுதல்...' - 'கண்ணீர்' மல்க விடைபெற்ற ஷாருக் கான்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பை போதை தடுப்பு பிரிவினர் மூலம் கைது செய்யப்பட்ட ஆர்யன் கானை அவரது தந்தை ஷாருக்கான் நேரடியாக சந்தித்து பேசியுள்ளார்.

கடந்த அக்டோபர் 3ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக வந்த புகாரின் பெயரில் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கான் மகன்

கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்ட்டுள்ளார். பல முறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தும் நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து வந்தது. மேலும், ஆர்யன் கானை 14 நாட்கள் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் மீண்டும் ஆர்யன் கானின் ஜாமீன் மனு  மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தநிலையில் அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ஷாருக்கான் மற்றும் வக்கீல் குழு, ஜாமீன் கோரி ஆர்யன் கான் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

தற்போது சிறையில் இருக்கும் தனது மகனை பார்ப்பதற்காக நடிகர் ஷாருக் கான் இன்று ஆர்தர் ரோடு சிறைக்குச் சென்றதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 3ஆம் தேதிக்கு பின் தன் மகனை ஷாருக்கான் இப்போது தான் நேரில் பார்க்க சென்றுள்ளார்.

இதுவரை சில முறை நீதிமன்ற அனுமதியோடு வீடியோ காலில் பேசினாலும் முதல் முறையாக ஷாருக்கான் இன்று தன் மகனை நேரில் சந்தித்துள்ளார். அங்கு அவர் அனுமதி பெற்று ஆர்யன்கானை சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடங்கள் மகனுடன் ஷாருக்கான் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அவர் கண்ணீர் மல்க தைரியமாக இருக்கும்படி ஆர்யன்கானிடம் கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பு மிகவும் உருக்கமானதாக இருந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 9.35 மணிக்கு ஷாருக்கான் அங்கிருந்து விடைபெற்று காரில் புறப்பட்டு சென்றார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்