'முதலில் பேஃஸ்புக்கில் பிரண்ட் ரிக்வெஸ்ட் வரும்'... 'அப்புறமா வாட்ஸ்அப்பில் வீடியோ கால்'... சபலத்தை வைத்து விளையாடிய பகீர் கும்பல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒருவருக்கு இருக்கும் சபலத்தை வைத்து மிரட்டி பணம் சம்பாதித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் இருக்கும் வசதி படைத்தவர்கள், சில எம்எல்ஏ மற்றும் தொழிலதிபர்களின் பிள்ளைகளுக்கு சில முகநூல் கணக்குகளிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பெண்கள் அந்த அழைப்புகளை அனுப்புவது போல இருப்பதால் பெரும்பாலும் பலரும் அந்த அழைப்புகளை ஏற்றுக் கொள்வது வழக்கம். பின்னர் நட்பாகப் பேச ஆரம்பிக்கும் பேச்சு நாளடைவில் நெருக்கமாகும். அந்த பேச்சானது பாலியல் உரையாடல் வரை நீளும்.

அப்போது சம்பந்தப்பட்ட நபருக்கு இருக்கும் சபலத்தைப் புரிந்து கொள்ளும் அந்த கும்பல், வாட்ஸ்ஆப் மூலமாக வீடியோ வீடியோ கால் பேசலாம் என அழைப்பு விடுக்கும். ஆனால் நடக்கப் போகும் விபரீதத்தை அறியாமல், பெண்ணோடு வீடியோ கால் பேசப் போகிறோம் என்ற ஆர்வத்தில் சம்பந்தப்பட்ட நபர் இருப்பார். அப்போது வரும் வீடியோ காலின் ஆரம்பத்திலேயே ஆபாசப் படம் ஓடிக் கொண்டிருக்கும்.

இதை எதிரே இருக்கும் நபர் லயித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மற்றொரு ஆப் மூலமாக அந்த நபரின் நடவடிக்கைகள் அனைத்தையும் அந்த கும்பல் ரெகார்ட் செய்து கொண்டே இருக்கும். அந்த நபரைத் தொடர்ந்து ஆபாசப் படம் பார்க்க வைப்பதோடு, அவரின் நடவடிக்கைகள் அனைத்தையும் தனியாக ரெகார்ட் வைத்துக் கொண்ட அந்த கும்பல், வீடியோ காலில் வரும் ஆபாசப் படம், மற்றும் அந்த நபரின் நடவடிக்கைகள் என இரண்டையும் ஒன்றாக இணைத்துச் சம்பந்தப்பட்ட நபருக்கு அந்த கும்பல் அனுப்பி வைத்துள்ளது.

அப்போது தான், தனக்கு நடந்தது என்னவென்பதை உணர்ந்து கொள்ளும் அந்த நபர், தான் எப்படி ஏமாற்றப்பட்டுள்ளேன் என்பதை அறிந்து அதிர்ந்து போவார். அதன்பின்னர் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் அந்த கும்பல், நாங்கள் கேட்கும் பணத்தைக் கொடுக்கா விட்டால் உனது வீடியோ அனைத்தையும் வெளியிட்டு விடுவேன் என மிரட்டல் விடுப்பார்கள்.

சமுதாயத்தில் நல்ல நிலையில் இருக்கும் அந்த நபர்கள், வீடியோ வெளியானால் மானமே போய்விடும் என்ற காரணத்திற்காக அந்த கும்பல் கேட்ட பணத்தைக் கொடுத்துள்ளார்கள். அதிலும் பல பேரை அதிகப் பணம் கேட்டு அந்த கும்பல் துன்புறுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு புகார் வந்ததையடுத்து, மும்பை குற்றப் பிரிவு போலீசாரிடம் அந்த கும்பல் தற்போது சிக்கியுள்ளது.

175 போலி முகநூல் கணக்குகள், 4 டெலிகிராம் கணக்குகள் மூலமாக அந்த கும்பல் பல பேரைத் தொடர்பு கொண்டு லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார்கள். பல துறைகளைச் சேர்ந்த பல பிரபலங்களிடம் இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்தது தற்போது தெரியவந்துள்ளது. இந்த கும்பல் பயன்படுத்தி வந்த 58 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ள போலீசார், மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்ற செய்திகள்