'அரசு உத்தரவை' காற்றில் பறக்கவிட்ட 'ஐ.டி. நிறுவனம்...' பாதிக்கப்பட்ட '13 ஆயிரம் ஊழியர்கள்...' 'நோட்டிஸ் அனுப்பி கடும் எச்சரிக்கை...'
முகப்பு > செய்திகள் > இந்தியாஊழியர்களுக்கான சம்பளத்தை குறைத்தாலும், அவர்களை வேலையிலிருந்து நீக்கினாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெக் மகிந்த்ரா நிறுவனத்தை தொழிலாளர் ஆணையர் அலுவலகம் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்படக்கூடாது எனவும், ஊழியர்களை வேலையில் இருந்து வெளியேற்றக்கூடாது எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
எனினும், கொரோனா பாதிப்பு நெருக்கடிக்கு மத்தியில், புனேவில் உள்ள டெக் மகிந்த்ரா நிறுவனம் தனது ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஐடி ஊழியர்களின் நலனுக்காக இயங்கி வரும் தேசிய ஐடி ஊழியர் செனட்டுக்கு (NITES), இதுகுறித்து புகார்கள் வந்தன.
இப்புகார்களின் அடிப்படையில் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை தேசிய ஐடி ஊழியர் செனட் நாடியுள்ளது. இந்த புகார் கடிதத்தில், “மே 6ஆம் தேதியன்று டெக் மகிந்த்ரா தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும் ஷிஃப்ட் அளவன்ஸ் மே 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக டெக் மகிந்த்ராவின் 13,000 ஊழியர்களுக்கான ஊதியம் குறைந்துள்ளது. மகாராஷ்டிர அரசின் உத்தரவுகளை, விதிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும் டெக் மகிந்த்ரா நிறுவனம் மீறியுள்ளது. ஆகவே இந்நிறுவனத்தின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக தொழிலாளர் ஆணையர் அலுவலகம் டெக் மகிந்த்ரா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மஹாராஷ்ட்ரா அரசின் உத்தரவை மதித்து ஊழியர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், டெக் மகிந்த்ரா தனது ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கக்கூடாது எனவும், அவர்களது சம்பளத்தை குறைக்கக்கூடாது எனவும், மீறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிலாளர் ஆணையர் அலுவலகம் எச்சரித்துள்ளது.
மற்ற செய்திகள்
'90ஸ் கிட்ஸ் அலெர்ட்'...'கொரோனாக்கு அப்பறோம் கல்யாணம் பண்ணிக்கலாம்'... ஆனா இவ்வளவு 'ரூல்ஸ்' இருக்கு!
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனாவால்' உலகின் 'பணக்கார' கோயிலுக்கே 'இந்த நிலையா'? ... 'இதையே நம்பி இருந்த' ஊழியர்கள் 'திணறிவரும்' அவலம்!
- 'கொரோனாவால்'.. 'வேலை இழந்த' 30 லட்சம் 'ஊழியர்கள்'! .. வாரம் ஒருமுறை 'மானிய நிதி வழங்க' முடிவெடுத்த 'நாடு'!
- 'நிறை மாத கர்ப்பிணி'... 'போகும் வழியில் நடந்த துயரம்'... 'போலீசாரை பதறவைத்த இளம் தம்பதி'!
- "கண்ணிமைக்கும் நொடியில உடல்கள் சிதறிப் போனது!.. கண்ணை மூடினா அந்த காட்சிதான்!".. 16 பேர் இறந்த ரயில் விபத்தில் உயிர் தப்பியவரின் 'உருகவைக்கும்' வாக்குமூலம்!
- ‘இரண்டு லட்சம் பேருக்கு சற்று ஆறுதலான விஷயம்’... ‘ட்ரம்பின் முடிவால்’... ‘கலக்கத்தில் இருந்து விடுபட்ட இந்தியர்கள்’!
- 'வேலைக்கு வராதோர் ஊதியத்தை பிடித்தம் செய்யலாம்...' 'உயர்நீதிமன்றத்தின்' உத்தரவால் அதிர்ந்து போன 'மாநில மக்கள்...'
- 'கொரோனா தாக்கம்...' 'ஆட்குறைப்பில் ஈடுபடும் நிறுவனங்கள்...' '2021ம் ஆண்டு நடக்கப் போவது என்ன?...
- 'இதுவரை' இல்லாத அளவுக்கு... 'இன்று' ஒரே நாளில் '778 பேருக்கு' கொரோனா... மொத்த பாதிப்பு 6000ஜக் கடந்த 'மாநிலம்'...
- ‘ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி’.... ‘கொடுத்த பிரபல நிறுவனம்’... 'முன்னாடி மாறி செய்யப் போறது இல்ல’... என்ன காரணம் !
- ‘கொரோனா பாதிப்பால் எடுக்கப்பட்ட முடிவு’... ‘மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி’... வெளிவந்த தகவல்!