‘1 மணிநேரத்துக்குள் 45 ஆம்புலன்ஸ்’!.. கொரோனா நோயாளிகளுடன் மருத்துவமனை வாசலில் வரிசை கட்டி நின்ற வண்டிகள்.. மிரண்டு போன மாநிலம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க மருத்துவமனையில் போதிய இடம் இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சாலையில் வரிசையாக நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் 2-வது அலை உருவாகியுள்ளது. இதனால் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. முதல் அலையின்போது மருத்துவமனைகளில், சிறப்பு கொரோனா மையம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை அடுத்து கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வர, சிறப்பு கொரோனா மையங்கள் அகற்றப்பட்டன. அங்கு பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள் வழக்கமான பணிக்கு மாற்றப்பட்டனர். மேலும் லேசான அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே சிகிச்சை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது.

ஆனால் தற்போது மின்னல் வேகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், உடனடியாக கொரோனா மையத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதற்கிடையில் மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இல்லாமல் மருத்துவர்கள் திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு வெளியே ஆம்புலன்ஸ் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த மருத்துமனையில் சூப்பிரெண்ட் ஜே.வி.மோடி, ‘மெடிசிட் கேம்பசில் 2120 படுக்கை வசதிகள் உள்ளன. தற்போது வரை 2008 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஒரு மணி நேரத்திற்குள் 45 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்ததை நாங்கள் கவனித்தோம்’ என அவர் தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் இதுபோன்ற நிலை ஏற்பட்டால் கடும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்