சாப்பாடு கொடுக்கப் போன... நர்சுகளை அறையில் அடைத்துவிட்டு... மனநல காப்பகத்தில் இருந்து தப்பிய 7 பேர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் மனநல காப்பகத்திலிருந்து, மனநல சிகிச்சை பெற்று வந்த 6 கைதிகள் உள்பட 7 பேர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் அரசு மனநலக் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் தண்டனை பெற்ற சிறை கைதிகள் மற்றும் மனநோயாளிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு 7.30 மணியளவில் மன நோயாளிகள் தங்கிய அறைகளுக்கு (cell) உணவு கொடுக்க, 2 ஆண் செவிலியர்கள் சென்றுள்ளனர். அப்போது, அந்த செவிலியர்களை தாக்கிய 7 பேர், அவர்களிடம் இருந்த அறையின் சாவியை பறித்துக் கொண்டு, அறையை திறந்து, அந்த அறையில் செவிலியர்களை அடைத்து விட்டு தப்ப முயன்றனர்.

அப்போது, சத்தம் கேட்டு வந்த ஆயுதம் ஏந்திய போலீஸ் ஒருவரையும் தாக்கிய அந்த 7 பேர், அவரிடமிருந்து செல்ஃபோன், 3 சவரன் செயின் உள்ளிடவற்றை பறித்துக் கொண்டு சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றனர். அங்கிருந்து தப்பிச் சென்றவர்களில் 6 பேர் சிறை தண்டனை பெற்று, மனநலக் கோளாறுகளால் பாதிப்படைந்ததால் இங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தப்பியோடியுள்ளனர். அவர்களுடன் கூடவே மனநோயாளி ஒருவரும் தப்பிச் சென்றார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீஸ் அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதற்கிடையில் தப்பியோடிய மனநோயாளி மட்டும் இன்று அதிகாலை போலீசாரிடம் பிடிபட்டார். தப்பியோடிய கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

ESCAPE, PRISIONERS, MENTAL, HEALTH, CENTRE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்