'வீடு தேடி வரும் திருப்பதி பிரசாதம்...' 'ஆன்லைன்ல பணத்த pay பண்ணவங்களுக்கு...' - காத்திருந்த அதிர்ச்சி தகவல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் புகழ் பெற்ற கோவில்களின் பட்டியலில் தெற்கிலிருந்து ஒன்றாக கூறப்படுவது திருப்பதி ஏழுமலையான் கோயில்.
திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் எவ்வளவு புகழ் பெற்றவையோ அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதங்களும் பிரசித்தி பெற்றவை. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் கோவிலின் பிரசாதங்கள் வீடுதேடி வரும் எனக்கூறி பக்தர்களிடம் மோசடி செய்த 7 போலி வெப்சைட்களை உருவாக்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவிலின் தரிசன டிக்கெட்டுகளும், ஆன்லைன் மூலமாகவே பக்தர்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் திருப்பதி தேவஸ்தானம் வெப்சைட் போல், போலியாக வெப்சைட் தொடங்கி, 'வீடு தேடி வரும் திருப்பதி பிரசாதம்' என விளம்பரப்படுத்தினர். இந்த போலி வெப்சைட்களில் ஏராளமான பக்தர்கள் பணத்தை கட்டி ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
இதை அறிந்த தேவஸ்தான அதிகாரிகள், கடந்த 8-ம் தேதி திருப்பதி கிழக்கு நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் 7 போலி வெப்சைட் நிறுவனங்கள் மீது திருப்பதி கிழக்கு நகர போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பக்தர்கள் போலி வெப்சைட்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தேவஸ்தான அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '5 வருஷமா இந்த வேலைய பாத்திருக்காரு?!!'... 'வீட்டுக்குள் சிகிச்சையில் இருந்த மூதாட்டி'... 'ஷாக்காகி விசாரித்ததில் வெளிவந்த பகீர் சம்பவம்!!!'...
- 'ஆசையா சோனி LED டிவி வாங்கிட்டு போனவரு...' 'வீட்ல போய் ஆன் பண்ணி பார்த்தா...' - அதிர்ந்து போன வாடிக்கையாளர்...!
- 'அதான் உங்க கழுத்துல 7 பவுன் செயின் இருக்குல...' 'அத கொடுங்க, நாங்க இத தரோம்...' பளபளப்பா மின்னின உடனே மனசுல ஆசை...' - கடைசியில இப்படி ஆகி போச்சே...!
- 63 போலி டெபிட் கார்டு.. 50 லட்சம் ரூபாய் பணம்... 'குடும்பமே சேர்ந்து கூட்டாக பார்த்த வேலை!'.. வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்!
- “20 வருஷமா பள்ளி ஆசிரியர்”.. முதல்வர் அலுவலகத்துக்கு வந்த ஒரே ஒரு புகார்!... விசாரணையில் ஆடிப்போன அதிகாரிகள்!
- “இனி நல்லகாலம்தான்.. ஜாதக கட்டம் சொல்லுது!”.. ‘குறி’ சொன்ன ‘சாமியார்!’.. ‘நம்பி’ செய்த காரியத்தால் ‘கம்பி’ எண்ணும் ‘கணவன், மனைவி உள்பட 5 பேர்’!
- "ஆன்லைன் மூலமாவே '2' லட்சம் வர 'லோன்' குடுக்குறோம்".. நம்பி தகவலை பகிர்ந்த 'நபர்'... இறுதியில் தெரிய வந்த அதிர்ச்சி 'பின்னணி'!!!
- "பொங்கி எழுந்த 100 கம்பெனிகள்!".. ரூ. 4.2 லட்சம் கோடி இழந்த பின்.. 'பேஸ்புக்' அதிபர் எடுத்த முடிவு!
- 'இ பாஸ்' கிடைக்கல... அதுனால அந்த கடையில இருந்து... போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்த 'ஜெராக்ஸ்' கடை!
- 'திருப்பதி லட்டு பிரியரா நீங்கள்?'.. பக்தர்களுக்காக அதிரடி திட்டத்துடன் களமிறங்கிய தேவஸ்தானம்!.. முழு விவரம் உள்ளே