'கொரோனா' தடுப்பூசி விலை குறைப்பு...! ஆனா 'அவங்களுக்கு' மட்டும் அதே பழைய 'ரேட்' தான்...! - சீரம் நிறுவனம் வெளியிட்ட சிறப்பு தகவல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சமீபத்தில் சீரம் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், கொரோனா வைரஸ் தடுப்பூசியான கோவிஷீல்ட் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 மற்றும் மாநில அரசுகளுக்கு ரூ.400 என அறிவித்தது.

இந்த விலையேற்றத்திற்கு முன்பாக ரூ.250-க்கு கோவிஷீல்டு தடுப்பூசி விற்பனை செய்யப்பட்ட நிலையில் அதன் விலை இரண்டு மடங்காக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மாநில அரசுகளுக்கு வழங்கும் விலையை மட்டும் சீரம் நிறுவனம் கொஞ்சம் குறைத்துள்ளது. இன்று (28-04-2021) வெளியான தகவலின்படி, மாநில அரசுக்கு ஒரு டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி விலை 400 ரூபாயில் இருந்து 100 ரூபாய் குறைக்கப்பட்டு, இனிமேல் 300 ரூபாய்க்கு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு நடவடிக்கை எந்தவித தாமதமின்றி உடனடியாக அமலுக்கு வரும் எனவும் சீரம் நிறுவன தலைவர் கூறியுள்ளார்.

இதன்படியாக மாநில அரசுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.300 விற்கப்படும் எனவும் தனியார் மருத்துவமனைக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விலையில் எந்த மாற்றமும் இல்லை என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்