‘பங்குசந்தை கிடுகிடு உயர்வு’.. ‘நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின்’.. ‘புதிய அறிவிப்பு தான் காரணமா..?’
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய தொழில் சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரத்தை 5 ஆண்டுகளில் 5 ட்ரில்லியன் டாலராக கொண்டு வரும் இலக்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஏற்கெனவே பல சலுகைகளை தொழில் முனைவோருக்கு அறிவித்துள்ள நிலையில் தற்போது அவர் மேலும் சில புதிய சலுகைகளை அறிவித்துள்ளார்.
அதன்படி அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவிகிதம் மட்டுமே வரி விதிக்கப்படும் எனவும், நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கார்ப்ரேட் வரி எனப்படும் வருமான வரி 22 சதவிகிதமாக குறைக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் எதிரொலியாக இந்திய பங்குசந்தைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் 2,011 புள்ளிகள் உயர்ந்து 38,105 புள்ளிகளை எட்டியுள்ளது. தேசிய பங்குசந்தை குறியீடான நிஃப்டி 600 புள்ளிகள் உயர்ந்து 11,300 புள்ளிகளை எட்டியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- இனி 'இந்த' சிகரெட் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு தரும்; தடை விதித்து மத்திய அரசு அதிரடி!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- தாத்தாவின் 'தலையில்' தொடர்ந்து முளைக்கும் 'பேய்க்கொம்பு'.. காரணம் என்ன?
- ‘அள்ளிக் கொடுக்கவும்’... ‘ஒரு மனசு வேணும்’... ‘எல்லோரையும் வென்ற’... 'இந்திய அணியின் இளம் வீரர்!
- ‘கிட்ட நெருங்கியாச்சு’... ‘தோனியின் சாதனையை சமன் செய்ய'... 'காத்திருக்கும் விராட் கோலி'!
- ‘ஏடிஎம் சேவையில் புதிய மாற்றம்’.. ‘ரிசர்வ் வங்கி’ வெளியிட்டுள்ள ‘முக்கிய அறிவிப்பு..’