'Hi-னு ஒரு மெசேஜ் மட்டும் வாட்ஸ்ஆப்ல தட்டி விடுங்க...' 'சொந்த ஊருல வேலை இருக்குன்னா தேடி வரும்...' 'விரிவான விவரங்கள்...' - பிரமாதமான அறிவிப்பை வெளியிட்ட TIFAC...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தாக்கத்தால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வேலையில்லாதவர்கள் வாட்ஸ்ஆப்பில் hi என அனுப்பினால் சொந்த ஊரிலேயே வேலையை தேடிக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு காலத்தில் பல வேற்று மாநில தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் வேலையில்லாமல் சொந்த ஊர்களுக்கு நடை பயணமாக சென்றனர்.
தற்போது சீரான சூழல் நிலவிவரும் நேரத்தில் சொந்த ஊர்களுக்கு திரும்பிய தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்காக வேற்று மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். சிலர் குடும்ப சூழலையொட்டி சொந்த பகுதிகளிலேயே கிடைக்கும் வேலையை செய்து வருகின்றனர். பலர் வேலையில்லாமல் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்
இதனை தவிர்த்து, அவர்களின் வேதனையை போக்கும் விதமாக தகவல் தொழில்நுட்பத்துறையின் சார்பில் புதிய முறை ஒன்று நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, 7208635370 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் Hi என மெசேஜ் அனுப்பினால் உள்ளூரில் இருக்கும் வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் நம் தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் தொழில்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறை TIFAC -யின் செயல் இயக்குநர் பிரதீப் ஸ்ரீவஸ்தாவா, TIFAC, SAKSHAM என்ற போர்டல் ஒன்றை உருவாக்கியுள்ளார். 7208635370 என்ற எண்ணிற்கு ஒருவர் மெசேஜ் அனுப்பும்போது, அவரின் திறமை, அனுபவம் குறித்த தகவல்கள் கேட்கப்பட்டு, அவர் கொடுக்கும் பதிலின் அடிப்படையில் அவர் இருக்கும் இடத்துக்கு அருகாமையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்பு தகவல்கள் தொழிலாளரின் செல்போனின் வாட்ஸ் ஆப்புக்கு வரும். இதனைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுக்கான வேலையை தேர்தெடுத்துக்கொள்ளலாம்.
மேலும் வாட்ஸ் ஆப் இல்லாத நபர்கள் 022-67380800 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, தங்களுக்கான வேலை குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் TIFAC -யின் செயல் இயக்குநர் பிரதீப் ஸ்ரீவஸ்தாவா கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இது பலரோட பல வருஷ கனவு...' 'TCS நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...' - கெடச்சா 'வேற லெவல்' தான்...!
- VIDEO: ‘அபார மோப்ப சக்தி’!.. கொரோனாவை நொடிப்பொழுதில் கண்டுபிடிக்கும் புகழ்பெற்ற ‘சிப்பிப்பாறை’ நாய்கள்..!
- வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை!.. மத்திய அரசு புதிய திட்டம்!.. யாருக்கு சாதகம்?.. யாருக்கு பாதகம்?
- “உலகப்போருக்கு அப்றம் இப்போ தான் இப்படி”.. ஆவிகளுடன் பேசுபவர்களிடம் அதிகமாக செல்லும் மக்கள்!.. ‘சோக’ பின்னணி!
- "கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்"!.. நடிகர் சூர்யா எமோஷனல் பதிவு!.. பொதுமக்களுக்கு அவர் சொன்ன முக்கிய கருத்து!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- 'அப்பாவிடம் இருந்து மகளுக்கு வந்த நோய்'... 'குடும்பத்தை காணமுடியாமல் பட்ட வேதனை'... ஆனா உச்சக்கட்ட மகிழ்ச்சியை கொடுத்த ஒரே ஒரு ஊசி !
- 'இப்போ பாக்குற வேலை வேண்டாம்'... 'புதிய வேலைக்கு தாவுவோம்'... இந்தியர்களின் முடிவுக்கு என்ன காரணம்!
- 'ரிஹானாவின் தாய்நாட்டிற்கு...' 'ஒரு லட்சம் டோஸ் கோவிஷீல்டு...' - பார்படோஸ் பிரதமர் இந்திய பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம்...!
- 'எந்த தாய்க்கும் என்னோட கஷ்டம் வர கூடாது'... 'பிறந்த குழந்தையை கொஞ்ச முடியாத நிலை'... 3 மாதம் கழித்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!