கல்லூரி ‘செமஸ்டர்’ தேர்வுகள் ரத்து.. அதிரடியாக அறிவித்த ‘மாநிலம்’..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் கல்லூர் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் அனைவரும் முந்தைய செமஸ்டர் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்