‘நம்பி வாங்குற மக்களுக்கு இப்படியா பண்ணுவீங்க?’.. ‘கழிவுநீர்க் கால்வாய் அருகே அமர்ந்து’ காய்கறி வியாபாரி பார்த்த வேலை! வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தள்ளுவண்டி காய்கறி வியாபாரி ஒருவர் கழிவுநீர் கால்வாயில் காய்கறிகளை சுத்தப்படுத்தி எடுத்துச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியாத இந்த வீடியோவில் வியாபாரி ஒருவர் தன்னிடம் இருக்கும் தக்காளி, பீன்ஸ், காலிஃப்ளவர் உள்ளிட்ட காய்கறிகளை தள்ளு வண்டியில் இருந்து எடுத்து, தனது தள்ளி வண்டியை அருகே நிறுத்தி வைத்து விட்டு அங்கிருந்த கழிவுநீர் கால்வாயில், காய்கறிகளைக் கழுவி சுத்தப்படுத்திய பின்பு, அவர்களை தனது தள்ளுவண்டியில் அடுக்கி வைத்து விட்டு தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு செல்லும் காட்சிதான் இந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

தள்ளுவண்டியில் வரக்கூடிய காய்கறிகள் புதிதாகவும் விலை குறைவானதாகவும் இருக்கும் என்று மக்கள் நம்பி வாங்குவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் காய்கறிகளை இவ்வாறு கழிவுநீர் கால்வாயில் வியாபாரி ஒருவர் சுத்தம் செய்து எடுத்து வருவதை கண்ட சிலர் அவருக்கே தெரியாமல் இதனை வீடியோ எடுத்தும், பின்னர் அவரை விரட்டி சென்று அவரை கையும் களவுமாக பிடித்தும், அவருடைய வண்டியில் இருந்த காய்கறிகளை எடுத்து குப்பையில் வீசிவிட்டு அவரிடம் சண்டையிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEOVIRAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்