மனைவியுடன் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதமிழகத்தின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சபரிமலை ஐயப்பன் கோவிலில் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்.
Also Read | சொதப்பிய மேக்கப்.. கடுப்பான கல்யாண பெண் செஞ்ச காரியம்.. பரபரப்பான கல்யாண வீடு..!
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்திபெற்ற ஐயப்பன் திருக்கோவில். கார்த்திகை மாதம் முதல் நாள் துவங்கிய உடனேயே பக்தர்கள் சபரிமலைக்கு இருந்து சாமி தரிசனம் செய்ய துவங்குவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டுகளுக்கான கோவில் நடை கடந்த நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. அது முதலே லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஐயப்பன் கோவிலில் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற இருக்கிறது. ஆன்லைன் முன்பதிவு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு உதவும் வகையில் சபரிமலை பாதையில் 13 இடங்களில் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பக்தர்கள் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மகர விளக்கு பூஜை சபரிமலையின் பொன்னம்பலமேட்டில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இதனை முன்னிட்டு சபரிமலையில் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. டிசம்பர் 9 மற்றும் 12 ஆம் தேதிகளில் ஐயப்ப தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தனது மனைவியுடன் சபரிமலையில் ஐயப்ப தரிசனம் செய்திருக்கிறார். தீபாராதனை நடைபெறும் வேளையில் மனைவியுடன் அவர் வழிபாடு நடத்தியிருக்கிறார். பின்னர் தரிசனம் முடித்த அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டிருக்கிறது.
Also Read | மாண்டஸ் புயல்.. அடுத்த 24 மணிநேரம் முக்கியம்.. வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் Exclusive பேட்டி..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- காரில் சாய்ஞ்சு நின்னதுக்காக சிறுவனுக்கு நேர்ந்த அதிர்ச்சி.. இன்னைக்கி அதே சிறுவனை 'Foreign' காரில் ஏற்றி அழகு பார்த்த தொழிலதிபர்
- சபரிமலையில் விஐபி தரிசன விவகாரம்.. உயர்நீதிமன்ற நீதிபதிகள் விதித்த அதிரடி உத்தரவு..!
- 9 வருடம் முன் இறந்த மனைவி.. தற்கொலைன்னு நெனச்சிட்டு இருந்தப்போ.. தெரியவந்த அதிர்ச்சி.!
- கடன் வாங்கும் பிளானில் வங்கிக்கு போன தையல்காரர்.. கொஞ்ச நேரத்துல வாழ்க்கையே புரட்டி போட்ட ஒரே ஒரு போன் கால்!!
- FIFA World Cup 2022 : அர்ஜென்டினா தோற்றதால் கண்ணீர் விட்ட கேரள சிறுவன்.. வீடு தேடி வந்த அசத்தல் ஜாக்பாட்!!
- நண்பருக்கு பெண் பாக்க போன இடத்தில்.. 78 வயது முதியவருக்கு மலர்ந்த காதல்.. திருமணத்தில் முடிந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
- மறதி நோய்.. 16 வருஷமா சொந்த வீடு தெரியாம சுற்றித் திரிந்த முன்னாள் ராணுவ வீரர்.. கடைசியில் நடந்த அதிசயம்..
- கேரளாவில் கொள்ளை.. தப்பிக்கலாம்னு திருடர்கள் போட்ட பலே பிளான்.. கடைசில மண்டை மேல இருந்த கொண்டையை மறந்த கதையா ஆகிடுச்சு..!
- Fifa WorldCup 2022 : கால்பந்து மேட்ச் பாக்க இப்படியா?.. 17 பேர் சேர்ந்து 23 லட்ச ரூபாயை திரட்டி.. உலகத்தையே திரும்பி பாக்க வெச்ச சேட்டன்கள்!!
- இந்திய ராணுவத்துக்கு பறந்த திருமண பத்திரிக்கை.. "அதுல இருந்த விஷயம் தான் இப்ப செம ட்ரெண்டிங்"!!