புதுச்சேரி கடல் சீற்றம்… நள்ளிரவில் இடிந்து விழுந்தது பழமையான துறைமுகப் பாலம்! பரபரப்பு சம்பவம்
முகப்பு > செய்திகள் > இந்தியாதென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“எங்க ஊர்ல கல்யாணம் பண்ணா..1.67 லட்சம் தர்றோம்"... வித்தியாச ஆஃபரை அறிவித்த நகரம்..!
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம்:
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த தாழ்வழுத்த மண்டலம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வுமையம். இதனால் தமிழகத்தின் சில பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. கடற்பகுதிகளில் காற்று வேகமாக வீசிவருகிறது. தமிழகத்தைப் போலவே அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் கடற்பகுதிகளில் காற்று சீற்றத்துடன் நேற்று முதல் வீசி வருகிறது.
இடிந்து விழுந்த துறைமுகப் பாலம்:
புதுச்சேரி கடற்கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த துறைமுகப் பாலம் நேற்று நள்ளிரவு வீசிய அதிவேகக் காற்றால் இடிந்துள்ளது. கடலுக்குள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாலம் சுமார் 100 மீட்டர் வரை இடிந்து விழுந்துள்ளது. இந்த பாலம் புதுச்சேரியை பிரெஞ்ச் காரர்கள் ஆண்ட போது கட்டப்பட்டது. அதன் பின்னர் சுதந்திரத்துக்கு பிறகு வம்கீராம்பாளையத்தில் புதிய பாலம் 1956 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1962 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில பத்தாண்டுகளாக இந்த பாலம் சிதிலமடைந்ததால் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. ஆனால் மக்கள் வந்து செல்லும் சுற்றுலாத் தளம் போல இந்த பாலம் செயல்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் பாலத்தின் நிலை மேலும் சந்தேகத்துக்கு உரியதாக ஆனதால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் தடைவிதிக்கப்பட்டது. அப்பகுதி மீனவர்கள் மட்டும் பாலத்தின் மேல் நின்று வலைவீசி மீன்பிடித்து வந்துள்ளனர்.
பாலத்தின் தற்போதைய நிலை :
பல சினிமா படங்களிலும் இந்த பாலம் காட்சிப் படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் பாலத்தின் மேல் பகுதி வலுவாக இருந்தாலும், அடியில் காங்கிரீட் தூண்கள் சேதமடைந்து இருந்த நிலையில் சமீபகாலமாக மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று வீசிய அதிவேகக் காற்றில் இந்த பாலத்தின் தூண்கள் சாய்ந்ததால் பாலம் 100 மீட்டர் வரை இடிந்து விழுந்துள்ளது. புதுச்சேரியின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த துறைமுக பாலம் இடிந்துள்ளது அப்பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துறைமுக வாயில் மூடல் :
துறைமுகப் பாலம் இடிந்துள்ளதால் துறைமுக வாயில் கதவை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் இருந்து வலைகளை வீசி மீனவர்கள் மின்பிடித்து வந்தனர். அதுபோலவே பாலத்துக்கு அருகில் பைபர் படகில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களும் இருந்தார்கள். பாலம் விழுந்து துறைமுகக் கதவு மூடப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.
"கடைசி இந்திய மாணவர் இங்கிருந்து வெளியேர்ற வர உக்ரைன்ல தான் இருப்பேன்" நெகிழ வைத்த இந்திய டாக்டர்..!
மற்ற செய்திகள்