"வண்டில இருந்து கைய எடுங்க சார்!".. காய்கறி விற்கும் பெண்ணுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த பரபரப்பு சம்பவம்!.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் வரும் மே 3-ஆம் தேதி வரை பிரதமர் ஊரடங்கை நீட்டித்துள்ளார்.

இதனால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லவும் அவற்றை விற்பனை செய்வதற்கு  மட்டும் தடை இல்லை எனவும் மத்திய மாநில் அரசுகள் அறிவித்துள்ளன.  இந்நிலையில் மும்பையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால் அப்பகுதிகளில் வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

எனினும் இதையும் மீறி தள்ளுவண்டியில் காய்கறியை விற்கச் சென்ற பெண் ஒருவரின் காய்கறி தள்ளுவண்டியை மறித்த போலீஸார், பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நடமாடும் காய்கறி வண்டியை தள்ளிச்சென்று விற்பதைக் கண்டித்தனர். மேலும் அந்த தள்ளுவண்டியை லாரியில் ஏற்றவும் முயன்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பெண்ணுக்கும் போலீஸாருக்கும் இடையேயான வாக்குவாதம் கைகலப்பாக மாற பின்னர் அப்பெண்ணின் வண்டியை கவிழ்த்து காய்கறி மொத்தத்தையும் போலீஸார் கொட்டினர்.

இதனால் அப்பெண், இன்னொரு பெண் போலீஸாரைத் தாக்கத் தொடங்கினார். அப்பெண்ணுடன் இருந்த மூதாட்டியும் அப்பெண்ணுக்கு ஆதராவாக நின்றார். இதனிடையே பெண் போலீஸாருக்கு ஆதரவாக

இதர போலீஸாரும் அதிகாரிகளும் நின்றனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியானதை அடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்