பரபரப்பை கிளப்பியுள்ள 'சூப்பர்பக்' தொற்று...! 'இதுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்குறது சாதாரண விஷயம் கெடையாது...' - ஆய்வில் வெளிவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலகம் எங்கிலும் பல நாடுகள் கொரோனாவின் அடுத்த அலை மற்றும் உருமாறிய கொரோனா வைரஸ் என கொரோனாவிடம் மாட்டி தவித்து வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்த வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் உருமாற்றமடைந்த வைரஸால் கொரோனா தொற்று பரவல் அதிவேகமெடுத்துள்ளன. இதன் காரணமாக தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த துன்ப சூழலில் தான் அந்தமானில் விஞ்ஞானிகள்  "சூப்பர்பக்" தடயங்களைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த சூப்பர்பக் கொடிய தொற்றுநோயைத் ஏற்படுத்தக்கூடும் என்ற ஒரு அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளனர். அந்தமானில் உள்ள ஒரு மல்டிட்ரக்-எதிர்ப்பு உயிரினமான கேண்டிடா ஆரிஸின் (Candida auris) மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

                                

இந்த கேண்டிடா ஆரிஸ் தான் ஒரு 'சூப்பர் பக்' என்றும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இது பூஞ்சை எதிர்ப்பு சிகிச்சையை எதிர்க்கும் தன்மையை இயல்பாக கொண்டுள்ளது. இது தொடர்பான ஆய்வு மார்ச் 16 அன்று mBio என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அனுராதா சவுத்ரி என்பவர் தலைமையிலான ஒரு ஆராய்ச்சி குழு  அந்தமான் தீவுகளைச் சுற்றியுள்ள எட்டு இயற்கை இடங்களில் ஆய்வு செய்தது. அங்கு சேகரிக்கப்பட்ட 48 மண் மற்றும் நீரின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்து ஆய்வு செய்தது. 

                                                

அங்குள்ள நிலங்களில் ஒன்று உப்பு சதுப்புநில ஈரநிலம், இது மக்கள் எப்போதாவது பார்வையிடும் பகுதி ஆகும். மற்றொன்று, அதிகமான மக்கள் பார்வையிடும் கடற்கரை பகுதி என்று தெரிவித்துள்ளனர். 

சதுப்பு நிலங்களில் கண்டறியப்பட்ட ஆரிஸ் தனிமைப்படுத்தல்கள், தற்போது மருத்துவமனைகளில் காணப்படும் கொரோனா வைரசின் விகாரத்துடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையவை" என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அதேபோல, உப்பு சதுப்பு நிலத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட கேண்டிடா ஆரிஸ் ஒரு எதிர்ப்பு திறன் கொண்டது அல்ல என்றும் மற்ற தனிமைப்படுத்தல்களுக்கு மாறாக அதிக வெப்பநிலையில் மெதுவான வேகத்தில் இவை வளர்ந்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

                                    

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தின் மூலக்கூறு நுண்ணுயிரியல் மற்றும் நோயெதிர்ப்புத் துறையின் தலைவர் டாக்டர் ஆர்ட்டுரோ காசடேவால் இதுபற்றி கருத்து தெரிவித்தார், அப்போது, "இந்த ஐசோலேட் செய்யப்பட்ட சி.ஆரிஸ் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல் வெப்பநிலைக்கு இன்னும் பொருந்தாத ஒன்றாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். ஆனாலும், 'சூப்பர்பக்' இயல்பாகவே தீவுகளில் வாழ்ந்ததா அல்லது அது அங்கு தான் முதன்முதலாக தோன்றியதா என்பதை ஆய்வு மூலம் நிரூபிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

                               

'சூப்பர் பக்' தீவுகளில் குறிப்பாக கடற்கரை அருகாமையில் வசிப்பவர்களால் பரவக்கூடும். ஏனெனில் அப்பகுதிகள் மனிதர்களால் தவறாமல் தொடர்ந்து செல்கின்றனர். சூப்பர்பக் குறித்து உலக சுகாதார அமைப்பும் கருத்து தெரிவித்துள்ளது. அப்போது,  சி. ஆரிஸ் காயங்கள் வழியாக உடலில் நுழைவதற்கு முன்பு தோலில் உயிர்வாழ்கிறது. இரத்த ஓட்டத்தில், அது கடுமையான நோயை ஏற்படுத்துகிறது மற்றும் செப்சிஸ் பாதிப்புக்கு வழிவகுக்குகிறது. இதன் காரணமாக உலகளவில் ஆண்டுக்கு 11 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளது.

                                  

'சூப்பர்பக்' இரத்த ஓட்டத்தில் கடுமையான தொற்றுநோய்களை ஏற்படுத்தும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) அறிவித்துள்ளது. மேலும் உணவுக் குழாய்கள், சுவாசக் குழாய்கள் தேவைப்படும் நபர்களை அதிகம் பாதிக்கும் என்று அது மேலும் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து லைவ் சயின்ஸ் நிறுவனம், "இந்த நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம்" என்று தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்