'நாங்க கடலிலேயே தங்கிக்குறோம்...' 'ஊரடங்கெல்லாம் முடியட்டும், அப்புறம் வரோம்...' நடுக்கடலில் ஆராய்ச்சி செய்ய சென்ற விஞ்ஞானிகள் அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடலில் ஆராய்ச்சி செய்ய சென்ற விஞ்ஞானிகள் இந்தியாவில் செயல்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவால் தாங்கள் நடுக்கடலிலேயே தங்குவதாக கூறியுள்ளனர்.

தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் (National Institute of Ocean Technology) சேர்ந்த குழு ஒன்று 3 வாரப் பயணமாக மேற்கு மற்றும் கிழக்குக் கடல்பகுதியில் சுனாமி எச்சரிக்கை முறைமை, கடற்படுகை அமைப்பு குறித்து அறிந்துகொள்ள பயணம் மேற்கொண்டனர்.

இக்குழுவானது சாகர் மஞ்சுஷா, சாகர் நிதி, சாகர் அன்வேஷிகா, , சாகர் தாரா உள்ளிட்ட திட்டங்களின் கீழ் கடல்குறித்த தரவுகளைத் திரட்டுவதற்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் தற்போது நிலவும் சூழலில் அவர்கள் அனைவரும்  கப்பலிலேயே தங்குவது என்பது நிலத்திற்கு வருவதை விடப் பாதுகாப்பானதுதான் என்று ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் எம்.ஏ. ஆத்மானந்த் கூறியுள்ளனர் மேலும் கடலுக்குச் சென்றுள்ள 4 கப்பல்களை ஏப்ரல் 14ஆம் தேதியே கரைக்குத் திரும்ப அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் நடுக்கடலில் இருக்கும் கப்பல்களில் சரக்குகள் உட்படத் தேவையான பொருட்கள் உள்ளதாகவும், கப்பலில் இருப்பவர்கள் தற்போது கரைக்கு வந்தாலும் தனிமைப்படுத்தப்பட்டுதான் இருக்க வேண்டும். அதற்கு அவர்கள் அங்கேயே இருப்பதே நல்லது என்று தெரிவித்துள்ளார் நிறுவனத்தின் கப்பல்கள் மேலாண்மைப் பிரிவுத் தலைவர் ராஜசேகரன்.

மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின் அவர்கள் கரைக்கு வரலாம், ஆனால் தற்போது செயல்முறையில் உள்ள இந்த ஊரடங்கு உத்தரவை மேலும் நீடிக்க நேர்ந்தால் கப்பலில் இருப்பவர்களை கொண்டுவரலாமா இல்லை வேண்டாமா என்ற முடிவை அரசு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHIP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்