பள்ளி, கல்லூரிகள் 'மீண்டும்' திறப்பது குறித்து... 'இந்த' தேதியில் முடிவு செய்யப்படும்: மத்திய அமைச்சர்
முகப்பு > செய்திகள் > இந்தியாபள்ளி, கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது ஏப்ரல் 14-ம் தேதி முடிவு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.
கொரோனா அச்சம் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு பிறப்பிக்கும் முன்பே அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் தற்போது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களும் விடுமுறையில் இருக்கின்றனர்.
இதற்கிடையில் ஊரடங்கு ஏப்ரல் 14-ம் தேதிக்கு பின்னர் மீண்டும் நீட்டிக்கப்படாது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இதுகுறித்து பேட்டி அளித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர்,'' ஊரடங்கு முடிந்ததும் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து ஆய்வு செய்த பின்னரே பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும். மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு அரசுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஊரடங்கு நீக்கப்பட்டவுடன் நிலுவையில் உள்ள தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டை நடத்துவதற்கு ஒரு திட்டம் தயாராக உள்ளது,'' என தெரிவித்து இருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தில் இன்று புதிதாக 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி...' 'மொத்த எண்ணிக்கை 571 ஆக உயர்வு...' சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்...!
- “கொரோனா சிகிச்சை அளிக்கப்போகும் எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்!”... செவிலியர்களின் நூதன போராட்டம்!
- ‘சட்டையை கிழித்து.. செல்போனை உடைத்து..’ .. ‘கொரோனா பரிசோதனைக்காக சென்ற மருத்துவக் குழுவினருக்கு’.. ‘நேர்ந்த பரபரப்பு சம்பவம்!’
- 'கொரோனா'வின் பிடியிலிருந்து மீண்டு வந்த 'இளைஞர்' ... 'கைதட்டி' உற்சாகமளித்த சக நோயாளிகள் ... வைரல் வீடியோ!
- “அந்த மருந்து சொர்க்கத்துல இருந்த வந்த பரிசு.. எங்களுக்கும் அனுப்பி வைங்க ப்ளீஸ்!”... இந்தியாவிடம் கேட்கும் ட்ரம்ப்!
- ‘இதுவரை பாதிக்கப்படாமல் இருந்த திருச்சியில் 17 பேருக்கும் பெரம்பலூரில் ஒருவருக்கும் கொரோனா!’.. ‘120 பேர் மருத்துவமனையில் அனுமதி!’
- தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 பெண் உட்பட 5 ஆக உயர்வு! உயிரிழந்தவர்களின் விபரங்கள் உள்ளே!
- ‘மனிதாபிமானத்துடன் சேவை புரியும் மருத்துவ பணியாளர்கள்!’... ‘அவங்க இங்கயே தங்கிக்கலாம்!’.. ‘டாடா குழுமத்தின் நெகிழ வைக்கும் முயற்சி!’
- ‘உங்க பேரை மாத்தி வைச்சுக்கோங்க’... ‘சீனா கொரோனா வைரஸ் விஷயத்தில்’... 'அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை அடுத்து'... 'விளாசித் தள்ளிய ஜப்பான்’!
- ‘அம்மாவோட நினைவுத் தினம்’... ‘1,500 பேருக்கு ஒரே நேரத்தில் ஆசையாக’... ‘விருந்து வைத்த இளைஞர்’... ‘கடைசியில் நேர்ந்த துயரம்’!