பள்ளி, கல்லூரிகள் 'திறப்பது' மீண்டும் தள்ளிப்போகுமா?... வெளியான 'புதிய' தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுமுறையில் இருக்கின்றனர். இந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 14-ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருவதால், பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும்? என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்குமாறு மாநில அரசுகள் பலவும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதுதொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அதுகுறித்த அறிவிப்பு வருகின்ற சனிக்கிழமை(11.4.20) அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான  சமீபத்திய கூட்டத்தில் மத மையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஏப்ரல் 14 முதல் குறைந்தது நான்கு வாரங்களுக்கு சாதாரண செயல்பாடுகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

வழக்கமாக மே மாதம் முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கும் என்பதால் அடுத்த கல்வியாண்டான ஜூன் மாதம் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்