முதலிரவுக்காக காத்திருந்த புது மாப்பிள்ளை.. 'அந்த நேரத்தில்' மணப்பெண் சொன்ன அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளா: தமிழகத்தில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த வாலிபர்களை மோசடி செய்து ஏமாற்றிய அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

திருமணத்திற்காக காத்திருக்கும் மணமகன்கள்:

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான மணிகண்டன் என்பவர் திருமணம் ஆகாமல் இருந்துள்ளார். இவர் கேரள மற்றும் தமிழக எல்லையான கொழிஞ்சாம்பாறை என்ற பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்ய பெண் தேடி சென்றுள்ளார். அப்போது இவரிடம் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 40 வயதான சுனில் மற்றும் பாலக்காடு மாவட்டம் கேரளச்சேரியை சேர்ந்த 35 வயதான கார்த்திகேயன் ஆகியோர் தங்களை திருமண புரோக்கர் என கூறி அறிமுகம் செய்துள்ளனர். உடனடியாக, தங்களிடம் பெண் இருப்பதாக கூறிக்கொண்டு மணிகண்டனிடம் கமிஷனாக ரூ.1.5 லட்சம் பணத்தை வாங்கியிருக்கிறார்.

முதலிரவுக்காக காத்திருந்த புது மாப்பிள்ளை:

இந்த நிலையில் கார்த்திகேயன் தனது தங்கை 28 வயதான சஜீதாவை கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி மணிகண்டனுடன் ஒரு கோயிலில் திருமணம் செய்து வைத்துள்ளார். பல வருடங்களாக திருமணம் ஆகாமல் இருந்தவர் திருமணம் ஆனவுடன் சந்தோசம் பொங்கி வழிந்தது. திருமணம் முடிந்த மகிழ்ச்சியில் மாப்பிளை மணிகண்டன் தன்னுடைய வீட்டில் முதலிரவுக்காக காத்திருந்தார் .அப்போது அந்த பெண் தன் அம்மாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது என்றும், எனவே கிளம்பி போக வேண்டும் என கூறி சென்றுவிட்டார்.

அதன் பிறகு மாப்பிளை அந்த சஜீதாவுக்கு  போன் செய்து பார்த்துள்ளார். ஆனால் போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால் சந்தேகடைந்த மணிகண்டன் பாலக்காடு சென்று விசாரித்துள்ளார். அப்போது கார்த்திகேயனுடன் சேர்ந்த கும்பல் இளம்பெண்களை காட்டி திருமண மோசடி செய்கிற கும்பல் என தெரியவந்தது.

விசாரணையில் வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்:

இதன்காரணமாக சந்தேகமடைந்த மணிகண்டன் பாலக்காடு சென்று விசாரித்துள்ளார். அப்போது கார்த்திகேயனுடன் சேர்ந்த கும்பல் இளம்பெண்களை காட்டி திருமண மோசடி செய்கிற கும்பல் என்ற அதிர்ச்சிகர தகவல் வந்துள்ளது. இதனையடுத்து மணிகண்டன் கொழிஞ்சாம்பாறை போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி மோசடி கும்பலை சேர்ந்த சஜீதா, தேவி,சகீதா, சுனில், கார்த்திகேயன் என ஐந்து பேர் கொண்ட மோசடி கும்பலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கும்பல் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், 'மணப்பெண் தேவை' என செய்தி தாள்களில் விளம்பரம் கொடுத்து அதன் மூலம் தொடர்பு கொள்பவர்களுக்கு பெண்களின் போட்டோக்களை அனுப்பி வைத்து நம்ப வைப்போம். அவர்களுக்கு பிடித்த பெண்களை திருமணம் செய்து வைப்பதாக  வாக்குறுதி அளித்து நம்ப வைக்கின்றனர். பின்னர் திருமணமே நடக்கிறது. அதற்கு பின் மணப்பெண் தப்பித்து ஓடி வந்துவிடுவது தான் இந்த மோசடி கும்பலின் திட்டம். இந்த சம்பவம் மணப்பெண் தேடும் இளைஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MONEY, TEENAGERS, BRIDES, MARRIAGE, திருமணம், மணப்பெண், விளம்பரம், மோசடி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்